156 ஒரு போர் முனையில்(ஒரு தாய் வயிற்றில்)

ஒரு போர்-முனையில் கண்ணன் எதை-உரைத்தான்
கொஞ்சம் அதை-நினைத்தால் நெஞ்சம் சிலிர்த்து-எழும்
(2)
எளிய-மனிதருக்கும் யோகம் புரிந்துயரும்
நல்ல வழி-அழகாய் அந்த கீதை-தரும்
ஒரு போர்-முனையில் கண்ணன் எதை-உரைத்தான்
கொஞ்சம் அதை-நினைத்தால் நெஞ்சம் சிலிர்த்து-எழும்
(MUSIC)
சோக உருவாகி சொந்த நிலை-மாறி பார்த்தன் தடுமாறவே
ஸ்லோகம் எழுநூறில் கண்ணன் தரும்-கீதை பிறவி மருந்தாகுமே
உண்டு-நாம் தேறவே கொண்டு-நாம் வாழவே
கண்ணன் சொன்ன-கீதை இன்றும்-என்றும் வாழுமே
ஒரு போர்-முனையில் கண்ணன் எதை-உரைத்தான்
கொஞ்சம் அதை-நினைத்தால் நெஞ்சம் சிலிர்த்து-எழும்
 (MUSIC)
உடலைச் சதமென்று உலகை நிஜமென்று மனது நினைக்கின்றது
*செயலை எனதென்று பலனின் நிலை-கொண்டு அழுது சிரிக்கின்றது
உன் திறம் உனவசம் என்பதே ஏதடா
கீதை சொல்லும்-பாதை செல்ல இல்லை-தீதடா
ஒரு போர்-முனையில் கண்ணன் எதை-உரைத்தான்
கொஞ்சம் அதை-நினைத்தால் நெஞ்சம் சிலிர்த்து-எழும்
(MUSIC)
நன்மை பலனென்று செயலில் வரும்போது அதனை எனதென்கிறாய்
துன்பம் வரும்போது இறைவன் செயலென்று அவனை நீ-நோகிறாய்
(2)
நான்-எனும் பைத்தியம் போக்கிடும் வைத்தியம்
அன்பாய் வந்து-சொன்னான் என்றும் அவன்-சொல் சத்தியம்
அடடா அன்று-சொன்னான் **அன்பு அவன் பேர் சத்தியம்
ஒரு போர்-முனையில் கண்ணன் எதை-உரைத்தான்
கொஞ்சம் அதை-நினைத்தால் நெஞ்சம் சிலிர்த்து-எழும்
எளிய-மனிதருக்கும் யோகம் புரிந்துயரும்
நல்ல வழி-அழகாய் அந்த கீதை-தரும்
ஒரு போர்-முனையில் கண்ணன் எதை-உரைத்தான்
கொஞ்சம் அதை-நினைத்தால் நெஞ்சம் சிலிர்த்து-எழும்
  
*நற்பயன் விளையின் செயல் எனதென்று சிரித்து மகிழ்வதும்  , துன்பங்கள் பலனாயின் செயல் எனதில்லை, எல்லாம் ஆண்டவன் செயல்/சோதனை என்று அவனை நோவதும், மனதின் இயல்பு
** அன்பே (சத்தியமாகிய பரம்பொருளாம்)  சிவம் 

Comments