154 ஒரு நாய் எனவே(ஒரு தாய் வயிற்றில்)



Click here for the Audio


ஒரு நாய்-எனவே-நெஞ்சே திரிந்து வந்தாய்
கொஞ்சம் அமைதி-கொண்டால் என்ன குறைந்து விடும்
ஒரு நாய் எனவே உலகில் திரிந்து வந்தாய்
கொஞ்சம் அமைதி கொண்டால் என்ன குறைந்து விடும்
*தன்னை மறந்திருக்கும்-பன்றி என-உழன்றான்
உன்னைத் தொடர்ந்ததனால் அந்த இந்திரனும்
ஒரு நாய்-எனவே-நெஞ்சே திரிந்து வந்தாய்
கொஞ்சம் அமைதி-கொண்டால் என்ன குறைந்து-விடும்
(MUSIC)
ஐந்து புலன்-போதும் சொந்தம்-கொண்டாடிச் சிரித்து உறவாடவே
நாளும் அதன்- ஆட்டம் வாழ்வின் இடை-தோன்றி பிரித்து எனை-மேயவே
என்று-நாம் ஒன்றினில் ஒன்றுபோல் வாழ்வதாம்  
கண்ணன் காட்டும்-பாதை தன்னை-என்றோ பூண்வதாம்
ஒரு நாய்-எனவே-நெஞ்சே திரிந்து வந்தாய்
கொஞ்சம் அமைதி-கொண்டால் என்ன குறைந்து-விடும்
(MUSIC)
சித்தம் உருவாக்கும் பித்தம்-எப்போதும் கொத்தித் தின்கின்றது
சத்தை ஒருபோதும் எண்ண என்-சித்தம் மறுத்து அலைகின்றது
என்-மனம் என்னையே தின்பதைக் காணவா
நாளும் இந்த-யாக்கை கொண்டு நானும் வாழ்வதாம்
ஒரு நாய்-எனவே-நெஞ்சே திரிந்து வந்தாய்
கொஞ்சம் அமைதி-கொண்டால் என்ன குறைந்து-விடும்
(MUSIC)
கண்ணில் திரைகொண்டு வாழ்ந்த-காந்தாரி போல நான்-வாழ்வதா
உண்மை உலகாளும் தருணம் வரும்போது சென்று நான் மாள்வதா
(2)
உண்பதா லட்சியம் தூக்கமா நித்தியம்
நெஞ்சா இல்லை நஞ்சா சொல்லு நீயே சத்தியம்
அய்யோ நெஞ்சு நஞ்சா சொல்லு நீயோர் வைத்தியம்
ஒரு நாய்-எனவே-நெஞ்சே திரிந்து வந்தாய்
கொஞ்சம் அமைதி-கொண்டால் என்ன குறைந்து-விடும்
தன்னை மறந்திருக்கும்-பன்றி என-உழன்றான்
உன்னைத் தொடர்ந்ததனால் அந்த இந்திரனும்
ஒரு நாய்-எனவே-நெஞ்சே திரிந்து வந்தாய்
கொஞ்சம் அமைதி-கொண்டால் என்ன குறைந்து-விடும்



முதல் பக்கம் Part II

Comments