150. விசை போட்டாற் போல்(இசை கேட்டால் புவி அசைந்தாடும்)

ஆ..ஆ
விசை-போட்டாற் போல் தினம்-ஆடும் மனம்-நீ-ஓர் பேயாகும்
(1+SM+1)
வீணாம்-உடலும் பாழும்-நீயும் பேரிடர் உருவாகும்
எனைத் தின்றிடும் கழுகாகும் நீ தின்றிடும் கழுகாகும்
விசை-போட்டாற் போல் தினம்-ஆடும் மனம்-நீ-ஓர் பேயாகும்
 (MUSIC)
*உன் ஆடல் பேய்-போல இருந்தால் என்ன  
உன்-கூடல் தேன்-போல இருந்தால் என்ன  
(2)
உன்-மேன்மை யார்-வந்து உரைத்தும் என்ன (2)
**புரியாத-காலத்தை நான்-தாண்டினேன் (2)
வீணாம்-உடலும் பாழும்-நீயும் பேரிடர் உருவாகும்
எனைத் தின்றிடும் கழுகாகும் நீ தின்றிடும் கழுகாகும்
(MUSIC)
கதியேது உன்னோடு லோகத்திலே மதியேது உன்னோடு மோகத்திலே
விழல்-நோக்கிப் பாய்கின்ற நீர்-போலவே (2)
உன்னோடு சங்காத்தம் வீண்-என்..றுமே
உன்னோடு சம்வாதம் வீண்-என்..றுமே
(Short Music)
***கத்தும்-கடலலை கூட ஓயுமிடர்
எந்தன் மன-அலை என்று ஓயும்-எனக் கூறுங்களேன்
எந்தன் இசைவுடன் பாழும் என்-மனதை  நானும் பெறவிலை என்ன ந்யாயம் இது கூறுங்களேன்
தன்னில் மனம்-என அந்த-ஆண்டவனும் ஒன்றும்-கொளவிலை என்ன ஞாயம்-இது கூறுங்களேன் .. கூறுங்களேன்
கூறுங்களேன் .. கூறுங்களேன்
விசை-போட்டாற் போல் தினம்-ஆடும் மனம்-நீ-ஓர் பேயாகும்

* பயம் நயம் இரண்டாலும் என்னை வயப் படுத்த முயலாதே மனமே
** இப்போது புத்தி வந்து உன்னைப் பற்றி புரிந்து கொண்டேன் மனமே

*** கத்தும் கடலலை கூட ஓயும் கடல் நடுவில்

Comments