149. எண்ணச் சுமையில்(எண்ணப் பறவை சிறகடித்து)

எண்ணச் சுமையில் மனமொடிந்தேன் கொஞ்சம் நிறுத்திடய்யா
என் இதயத்திலே கடல் அலைபோல் எண்ணம் அடிக்குதய்யா
(MUSIC)
எண்ணம் ஓயும் அந்நேரம்-பே..ரின்பம் பிறக்கின்றதாம் (2)
பிறகு வாழ்ந்திடும்-உலகில் எது-நடந்தாலும் ஒன்றும் எனக்கில்லையாம்
பிறகு வாழ்ந்திடும்-உலகில் எது-நடந்தாலும் துன்பம் எனக்கில்லையாம்
(SM)
என்பதைச் சொன்னார் பதஞ்சலிப் பெம்மான் நீயதைப் படிக்கல்லையா
உண்மை-உருவம் கொண்டு-நடந்தும் உனக்கெனைத்  தெரியல்லையா
எண்ணச்-சுமையில் மனமொடிந்தேன் கொஞ்சம் நிறுத்திடய்யா
என் இதயத்திலே கடல் அலைபோல் எண்ணம் அடிக்குதய்யா
(MUSIC)
தூங்கலின்-மேலே ஓர்-வரம் வேண்டேன் எனக்கதை அளித்திடுவாய்
(2)
எண்ணத் தூக்கத்தினாலே விழிப்பினைத்-தந்தே என்னை எழுப்பிடுவாய்
(2)
(SM)
அன்னையர்-கோடி கருணையில்-நீயே என்றுன் புகழில்லையா
நீ அதற்குத்தக செயல்-கொள்ளும் கடமை உனக்கில்லையா
எண்ணச் சுமையில் மனமொடிந்தேன் கொஞ்சம் நிறுத்திடய்யா

என் இதயத்திலே கடல் அலைபோல் எண்ணம் அடிக்குதய்யா

முதல் பக்கம் Part II

Comments