148. என்ன கற்று தேறினாலும் (என்ன கவி பாடினாலும்)




என்ன-கற்று தேறினாலும்..
என்ன-கற்று தேறினாலும் இன்னும்-ஒன்றும் விளங்கவில்லை (2)
இன்னும்-என்ன செய்யணுமோ இறைவா.. இறைவா..
என்ன-கற்று தேறினாலும்.. ஆ..

ஒண்ணையும் அறியவில்லை
ண்ணையும் அறியவில்லை
ஒண்ணையும் அறியவில்லை கற்றதோ நினைவிலில்லை (2)
ஸ்வாமியுன் காட்சி-இல்லை லோகமோ பெருத்த தொல்லை (2)
என்ன-கற்று தேறினாலும்..

அக்ஷரம்-மிச்சம் இன்றி கற்ற-பலன் ஏதுமில்லை
செத்தவுடனே எனக்கு பரிந்தளிக்க-யாருமில்லை
இச்சகத்தில் வீணிருந்தால் எனக்கோர் நிறைவில்லை
இறைவா.. இறைவா
இச்சகத்தில் வீணிருந்தால் எனக்கோர் நிறைவில்லை
உய்தலுண்டோ எனக்கு இறைவா..
உய்தலுண்டோ எனக்கு என்ன நான் செய்யவில்லை (2)

என்ன-கற்று தேறினாலும்..



முதல் பக்கம் Part II

Comments