147. இனிமேல் முடிந்திடுமா(தரைமேல் பிறக்க வைத்தான்)


உலகத்தில் ஆட்டம் நிலை-தானோ
புலனின்ப நாட்டம் தொலையாதோ
தொலைவதே வாழ்க்கை உணராதோ

இதை-என் நெஞ்சம் உணராதோ

இனிமேல் முடிந்திடுமா கல்லிலே தண்ணீர்-சு..ரந்திடுமா
ஐந்தில் தவற-விட்டால் ஐம்பதில் ஐயா-வளைந்திடுமா
(2)
இனிமேல் முடிந்திடுமா
(MUSIC)
கட்டிய-வீட்டில் குற்றம்-சொல்லி தினமும்-சலித்திடும் நெஞ்சே
தெய்வமும்-உள்ளே இருப்பதை-மறந்து வெளியே-பறந்திடும் பஞ்சே
கண்ணில்-படாமல் ஸ்வயமாய்-ஒளிரும் உள்ளே சென்று-தேடு
சொல்லில்-படாமல் ஸ்வயமாய்-ஒளிரும் உள்ளே சென்று-தேடு
படித்தா-புரியும் *நடந்தால்-தெரியும் அதுதான் ஆன்ம-வாழ்க்கை
அதற்காம் கொண்ட யாக்கை
இனிமேல்-முடிந்திடுமா  கல்லிலே தண்ணீர்-சு..ரந்திடுமா
ஐந்தில் தவற-விட்டால் ஐம்பதில் ஐயா-வளைந்திடுமா
 (MUSIC)
உடலம்-வழியே வெளியே-போனால் விடிவைக் கண்டிடுவாயோ
சடலம்-என்றே உடலும்-ஆனால் முடிவைக்-கண்டிடுவாயோ
ஒருநாள் பிறந்தால் ஒருநாள் இறப்பாய் ஒவ்வொரு பிறப்பும் மரணம்
(2)
*அது-நாள் வரையில் உடல்-ஒரு சிறையே உயிரால் வாழ்ந்திடும் சடலம்
உயிரால் வாழுது உடலும்
இனிமேல் முடிந்திடுமா கல்லிலே தண்ணீர்-சு..ரந்திடுமா
ஐந்தில் தவற-விட்டால் ஐம்பதில் ஐயா-வளைந்திடுமா
இனிமேல் முடிந்திடுமா

*நடந்தால்-தெரியும்=படித்ததைப் புரிந்து அதன்படி நடத்தலே ஆன்ம வாழ்க்கை

*அது நாள் வரையில்=முக்தி அடையும் நாள் வரையில்



முதல் பக்கம் Part II

Comments

  1. அருமை.. உடலம் என்றால் என்ன அர்த்தம்

    ReplyDelete

Post a Comment