146. தித்திப்பு தித்திருக்க (தித்திக்கும் மூவிரண்டு)

தித்திப்பு-தித்தித்திருக்க தித்திப்புக்கு-தித்திப்பினை
தந்த-கண்ணன் நாமம் சொல்லவா
(2)
கட்டிய அவல்-பொரிக்கு தன்னையே-ப..ரிசளித்த
கண்ணனவன் பேரைச்-சொல்லவா
(2)
கண்ணன் நாமம்-சொல்லவா அதில் போதம்-கொள்ளவா
கண்ணன் நாமம்-சொல்லவா அதில் பாவம்-தள்ள வா
(MUSIC)
ஐம்பத்தாறு படியேறி நெஞ்சமதில் பேர்-கூறி
செல்லுவோம்-வா நாமும்-த்வாரகா
(2)
பக்தியின் துடுப்பு-கொண்டு சமுத்திரத்..தைக்-கடந்து செல்லுவோம்-வா பேடு-த்வாரகா
பக்தியில்-பி..டிப்பு-கொண்டு பிறவிக்கடல்-கடந்து செல்ல வைக்கும் பாட்டு பாடவா

சத்தியத்தி..ரு-உருவம் என்றான-அவனுக்கு யாவும்-பணி செய்யுமல்லவா
(2)
அத்தனையும் விட்டுவிட்டு பக்தனுக்குப் பணி-செய்ய
வந்த-அன்புக் கண்ணனல்லவா
(2)
கண்ணன் நாமம்-சொல்லவா அதில் போதம்-கொள்ளவா
கண்ணன் நாமம்-சொல்லவா அதில் பாவம்-தள்ள வா
தித்திப்பு-தித்தித்திருக்க தித்திப்புக்கு-தித்திப்பினை
தந்த-கண்ணன் நாமம் சொல்லவா
கட்டிய அவல்-பொரிக்கு தன்னையே-ப..ரிசளித்த
கண்ணனவன் பேரைச்-சொல்லவா
(MUSIC)
சக்தி-எனக்..கில்லை-என அர்ச்சுனன்-கை வில்லை-விட்டு
துக்கத்தில்-அ..மர்ந்தானல்லவா
(2)
சக்தி-தந்து பார்த்தன்-தன்னைச் சடுதியில்-வில்லெடுக்க 
வச்ச-கண்ணன் கீதை-சொல்லவா
(2)
பக்தரின்-களிப்பினுக்கு மண்ணுலகில்-விண்ணுலகைப் படைத்தது தானே-த்வாரகா  
(2)
அத்தனையும் போதாதென்று மண்ணுலகில் வந்து-தன்னைத் தந்த-நிஜக் கதை சொல்லவா 
(2)
கதை தன்னைச் சொல்லவா ..அவன் லீலை சொல்லவா (2)
தித்திப்பு-தித்தித்திருக்க தித்திப்புக்கு-தித்திப்பினை
தந்த-கண்ணன் நாமம் சொல்லவா
கட்டிய அவல்-பொரிக்கு தன்னையே-ப..ரிசளித்த
கண்ணனவன் பேரைச்-சொல்லவா
கண்ணன் நாமம்-சொல்லவா அதில் போதம்-கொள்ளவா

கண்ணன் நாமம்-சொல்லவா அதில் பாவம்-தள்ள வா

முதல் பக்கம் Part II

Comments