கக்கத்தில் கட்டை கொண்டு கையில்
நீரின் கமண்டலம் கொண்டு-விட்டேன் இன்றே
(1+SM+1)
மாலையை மார்பில்-கொண்டே-மண்ணை நானும்
மார்பினில் பூசிக்கொள்வேன் நன்கே
(2)
கக்கத்தில் கட்டை கொண்டு கையில்
நீரின் கமண்டலம் கொண்டு-விட்டேன் இன்றே
(MUSIC)
கச்சத்தில் பட்டுக்-கட்டிப் பரிசுகள்-எடுத்து
பிச்சை கொடுக்கத்-துட்டு தங்கத்தில் வடித்து
செல்ல எனக்குப்-பல ஆலயம் இருக்கு
ஐயா அங்கு இருக்கா-சொல் ஆண்டவன் முழுது
கக்கத்தில் கட்டை கொண்டு கையில்
நீரின் கமண்டலம் கொண்டு-விட்டேன் இன்றே (2)
வேஷத்தைப் பூண்டுவிட்டேன் இன்றே
(MUSIC)
எண்ணத்தில் சூது-விட்டுக் கண்ணீரில் கோது
என்றைக்குப் போகுமென்று நிற்கின்றேன் பாரு
அன்றைக்கு வீடு-என்னும் மன்னன் அடிப்பேறு
(sm)
அன்றைக்கு வீடு-என்னும் மன்னன் அடிப்பேறு
(sm)
அன்றைக்கு வீடு-என்னும் மன்னன் அடிப்பேறு
நானும் அடைந்திடக் காத்திருக்கேன் பார-நெஞ்சோடு
கக்கத்தில் கட்டை கொண்டு கையில்
நீரின் கமண்டலம் கொண்டு விட்டேன் இன்றே
(MUSIC)
உள்ளத்தில் வேஷமின்றி ஊமையென்றிலங்கும்
உண்மையின் பாஷை-என்று எங்கெ..னக்குப் புரியும்
உண்மையின் பாஷை-என்று எங்கெ..னக்குப் புரியும்
என்றைக்கு தெய்வம்-வந்தென் பந்தத்தை-அறுக்கும் (2)
என் மண்ணக வாழ்வு-நின்று என்று-மெய் விளங்கும்
கக்கத்தில் கட்டை கொண்டு கையில்
நீரின் கமண்டலம் கொண்டு-விட்டேன் இன்றே
மாலையை மார்பில்-கொண்டே-மண்ணை நானும்
மார்பினில் பூசிக்கொள்வேன் நன்கே
கக்கத்தில் கட்டை கொண்டு கையில்
கக்கத்தில் கட்டை கொண்டு கையில்
நீரின் கமண்டலம் கொண்டு-விட்டேன் இன்றே
முதல் பக்கம் Part II
Comments
Post a Comment