142 எல்லாம் தெரிந்திருக்கும்(புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே)



எல்லாம் தெரிந்திருக்கும் ஏகாம்பரமே
யாவும் கற்றான பின்-என்ன உண்டோ பலனே
(2)
கற்றாலும் கற்றார்-போல நிற்காமலே
இரும் ஒரு-வாழ்வில்-என்ன பலன் கூறுங்களேன்
(2)
எல்லாம் தெரிந்திருக்கும் ஏகாம்பரமே
யாவும் கற்றான பின்-என்ன உண்டோ பலனே
(MUSIC)
கண்ணீர் தனின்-சொரிவு இல்லாமலே
நெஞ்சம் கல்லாக மெய்யறிவு ஏதுங்களே
(2)
பொன்வே-ண்டிக் கற்கும்-அன்பு மாந்தர்களே
கொஞ்சம் கண்மூடி நெஞ்சில்-பொன் தேடுங்களேன் (2)
எல்லாம் தெரிந்திருக்கும் ஏகாம்பரமே
யாவும் கற்றான பின்-என்ன கூறுங்களேன்
(MUSIC)
அறிவாலே கண்ணில்-என்றும் தெரியாதவன்
வெறும் படிப்பாலே நாம்-தேடப் புரியாதவன்
(2)
வெளி-வேடம் தன்னில்-என்றும் மகிழாதவன்
அன்பில் நீர்-சிந்த-வந்..தள்ளிக் கொள்வானவன் (2)
எல்லாம் தெரிந்திருக்கும் ஏகாம்பரமே
யாவும் கற்றான பின்-என்ன உண்டோ பலனே
(MUSIC)
பொன்-வேலி எனக்கல்வி தன்னை அமைத்தாய்
அதன் உள்-மேய்ந்து உண்மை-தனை முற்றும் மறந்தாய்
(2)
கற்பதொன்றே பெருமை-என்று வேதம் படித்தாய்
வீண் படிப்பெதற்கு போதம்-தரும் அன்பை மறந்தாய் (2)
எல்லாம் தெரிந்திருக்கும் ஏகாம்பரமே
யாவும் கற்றான பின்-என்ன கூறுங்களேன்
கற்றாலும் கற்றார்-போல நிற்காமலே
இரும் ஒரு-வாழ்வில்-என்ன உண்டோ பலனே
எல்லாம் தெரிந்திருக்கும் ஏகாம்பரமே
யாவும் கற்றான பின்-என்ன உண்டோ பலனே




முதல் பக்கம் Part II

Comments