நீரோடும்-நதிகளையே தேட-வேண்டுமா
அதில் நீராடப் பாவங்களும் ஒழிந்து-போகுமா
நீரோடும்-நதிகளையே தேட-வேண்டுமா
நீராடி முடித்தவுடன் ஆணவம் போமோ
விழி-மூட உள்ளமது விழித்திடல்-ஆமோ
நீரோடும்-நதிகளையே தேட-வேண்டுமா..
(MUSIC)
ஆவென்று-கூறாமல் நோதல் ஏதய்யா-ஊனில்
நோவொன்றும் கொள்ளாமல் நோன்பும் வீணய்யா
(2)
*சொல்லொன்று இல்லாமல் லோகம் ஏதய்யா என்றும்
கசப் பொன்று இல்லாமல் இனிப்பு ஏதய்யா
நீரோடும்-நதிகளையே தேட-வேண்டுமா
அதில் நீராடப் பாவங்களும் ஒழிந்து-போகுமா
(MUSIC)
முங்கி-முங்கி குளித்த-பின்னே குளிரும்-தோன்றுமா-நீ
முத்து-முத்தாய் எடுத்த-பின்னே இருளும்-தோன்றுமா
(2)
யாத்திரையை உள்ளுக்குள்ளே கொள்ள-வேண்டுமே
அப்பொழுதே உன்-முழுதில் ஆர்வம்-தோன்றுமே
நீரோடும்-நதிகளையே தேட-வேண்டுமா
அதில் நீராடப் பாவங்களும் ஒழிந்து-போகுமா
(MUSIC)
இன்றே-நீ லோகமெல்லாம் நடந்து-சென்றாலும் உன்
நடையினிலே உலகத்தையே கடந்து-சென்றாலும்
விண்ணுலகை இறந்தவுடன் அடைந்துவிட்டாலும்-பார்
மறுபடியும் பிறந்து வந்து உன்னைத் தேடுவாய்
மறுபடியும் பிறந்து வந்து உன்னைத் தேடுவாய்
நீரோடும்-நதிகளையே தேட-வேண்டுமா-அதில்
நீராடப் பாவங்களும் ஒழிந்து-போகுமா
நீரோடும்-நதிகளையே தேட-வேண்டுமா
*சொல்லொன்று=ப்ரணவம்
Comments
Post a Comment