139 வாயை மூடிக் கொள் தம்பி (நாலு பேருக்கு நன்றி )


***



உள்ளத்தில் இருப்பதெல்லாம் சொல்லணும் என்று இல்லை
நீ ஊமையாய் இருந்து விட்டால் உனக்கொரு துன்பமில்லை
என் தம்பியே உனது-நாவைக் கட்டினால் உலகில்-பின்னர்
உனக்கொரு துன்பமில்லை பேசினால் வாழ்வே சாவாம்
உந்தன் வாயை மூடிக்கொள் தம்பி

------------

வாயை மூடிக்கொள் தம்பி உந்தன்-வாயை மூடிக்கொள் தம்பி (2)
வாயில்லாத ஓர்-ஊமை போலே வாழக்-கற்றே பிழைத்துக் கொள்வாய் 
வாயை மூடிக்கொள் தம்பி.. உந்தன் வாயை மூடிக்கொள் தம்பி
(MUSIC)
உறவு-என்றே உனக்கிருப்பார் வாய்-நீ திறந்திடும் வரையில் 
அவர்-குறையை எடுத்துரைத்தால் உடைந்து போகும் உறவு
எண்ணம் போலே இன்றே செய்வார் நாளை இல்லை என்றே செய்வார் 
பகட்டைச் சேவை என்றே செய்வார் கறுப்பை வெள்ளை என்றே சொல்வார்
கொஞ்சமேனும் உண்மை சொன்னால் அந்த நேரம் வந்திடும் கோபம்
வாயை மூடிக்கொள் தம்பி
வாயை மூடிக்கொள் தம்பி உந்தன்-வாயை மூடிக்கொள் தம்பி
வாயில்லாத ஓர்-ஊமை போலே வாழக்-கற்றே பிழைத்துக் கொள்வாய் 
வாயை மூடிக்கொள் தம்பி .. உந்தன்-வாயை மூடிக்கொள் தம்பி
(MUSIC)
சொன்னதை-நீ ஒத்துக்-கொண்டால் புன்னகை வந்திடும்-பிந்தி
சொன்ன-பணி செய்திடுவாய் நீ-கழை ஆடிடும் மந்தி

செய்யும்-எதையும் தானாய்ச் செய்வார் 
உன்னைப் பின்னால் யோசனை கேட்பார் 
(2)
தவறை நீ-கண்டு சொல்லும்போது தேவையில்லை உன் பேச்சென்பார் 

என்றும் வாயை மூடிக்கொள் தம்பி..
வாயை மூடிக்கொள் தம்பி உந்தன்-வாயை மூடிக்கொள் தம்பி வாயில்லாத ஓர்-ஊமை போலே வாழக்-கற்றே பிழைத்துக் கொள்வாய் 
வாயை மூடிக்கொள் தம்பி.. உந்தன் வாயை மூடிக்கொள் தம்பி




Comments