138 நாலு வேதத்தை நம்பி(நாலு பேருக்கு நன்றி )

***

நாலு வேதத்தை-நம்பி சென்று தேறு..வாய்-நீ தம்பி (2)
கோதில்லாத சிதானுபவம்-தான் வேதம் ஆகும் நீயும்-தேறு 
நாலு வேதத்தை நம்பி நீயும் சென்று ஓதிடு நம்பி
(MUSIC)
உறவு-சென்றும் உனக்கு-என்றும் உறவாய் இருப்பது-ஒன்று 
அழிவினுக்கும் அழிவிருக்கும் *அதற்கு-ஏதோ ஒன்று
வேதம்-சொல்லும் யாகம்-த்யாகம் ஆசை-கொல்லும் த்யாகம் யாகம் (2)
சொந்த-ரூபம் இன்றே-காண்பாய் என்று-கூறும் நால்வகை-வேதம்
வேதம் கூறுது தம்பி
நாலு வேதத்தை-நம்பி சென்று தேறு..வாய்-நீ தம்பி
கோதில்லாத சிதானுபவம்-தான் வேதம் ஆகும் நீயும்-தேறு 
நாலு வேதத்தை நம்பி நீயும் சென்று ஓதிடு நம்பி
(MUSIC)
**உண்பதையே உண்மை-என்றான் இல்லை என்குது-தம்பி
மென்-மனதை உண்மை-என்றால் இல்லை என்குது-தம்பி
ப்ராணன்-தன்னை உண்மை-என்றால் அதுவும்-இல்லை என்கும்-வேதம் (2)
எதற்குமுள்ளே என்றுமெப்போதும் இருக்கும்-நானே உண்மையாகும் 
(PAUSE)
என்று-வேதம் சொல்லுது தம்பி
நாலு வேதத்தை-நம்பி சென்று தேறு..வாய்-நீ தம்பி
கோதில்லாத சிதானுபவம்-தான் வேதம் ஆகும் நீயும்-தேறு 
நாலு வேதத்தை நம்பி நீயும் சென்று ஓதிடு நம்பி

*ஆன்மாவிற்கு அழிவில்லை

** ப்ருகு வாருணி(தைத்ரீய உபநிஷதம்) = ப்ரம்மம் என்பது உணவு,மனம்,மற்றும் ப்ராணன் இல்லை அதைக் கடந்த ஆனந்த மயமான தன்னுணர்வேயாகும்  என்று சொல்கிறது

Comments