(நாஸ்திக ஆஸ்திக சம்வாதம்)
எங்கும் இருக்கும் ஆண்டவனே நீ மறைந்து-கரந்து வாழ்வதேன்
உலகைப்படைத்த கோமகனே
உனக்கிருக்க மனத்தின் கோவில்-ஏன்
(2)
சொல்லித்தர இது கல்வி-இல்லே
இதைப் படித்தால் கேட்டால் புரிந்திடுமோ
(2)
ஏட்டுச்-சுரையில் கூட்டு-வடிக்க
நாக்கில் சுவையும் தோன்றிடுமோ
(2)
சொல்லித்தர-இது கல்வி இல்லே
(MUSIC)
*அஞ்சு-நெறி என்றால்-என்ன அந்த-மடி நன்றா-என்ன (2)
கேள்விகளை விட்டால்-என்ன எள்ளும்-உள்ளம் நன்றா-என்ன (2)
வேள்விகளும் நன்றா-என்ன கத்துவதும் நன்றா-என்ன (2)
கேள்விகளை விட்டால்-என்ன எள்ளும்-உள்ளம் நன்றா-என்ன (2)
வேள்விகளும் நன்றா-என்ன கத்துவதும் நன்றா-என்ன (2)
கேலிகளும் நன்றாஎன்ன கொஞ்சம்மௌனம் கொண்டால்என்ன (2)
எங்கும் இருக்கும் ஆண்டவனே நீ மறைந்து-கரந்து வாழ்வதேன்
ஏட்டுச்-சுரையில் கூட்டு-வடிக்க நாக்கில் சுவையைத் தேடுவதேன்
எங்கும் இருக்கும் ஆண்டவனே
(MUSIC)
நீ எடுத்துச் சொன்னால்-என்ன செய்விரதம் ஒன்றால்-என்ன
நீ எடுத்துச் சொன்னால்-என்ன மெய்-வருத்தல் நன்றா-என்ன
எந்த-விடை தந்தால்-என்ன கேட் கும் உள்ளம் உண்டா என்ன
எந்த-விடை தந்தால்என்ன கேட்டல் உன்னில் உண்டா என்ன
ஐயம்-வரும் வந்தால்-என்ன தீர்க்கப்-பதில் தந்தால்-என்ன (2)
என்றும்-ஐயம் என்றால்-என்ன நீயே பதில் கண்டால்-என்ன (2)
எங்கும் இருக்கும் ஆண்டவனே நீ மறைந்து-கரந்து வாழ்வதேன்
உழகைப் படைத்த கோமானை நீ ஐயம் கொண்டே தேடுவதேன்
எங்கும் இருக்கும் ஆண்டவனே
* அஞ்சு நெறி = பஞ்ச சம்ஸ்காரங்கள் என வைணவத்தில் அழைக்கப்படும் செந்நெறிகள் : 1.சங்கு சக்ரம் தரித்தல், 2.நாமம் உடலணிதல், 3.தாச நாமம் ஒன்றை ஏற்றல் , 4.திருமால் வடிவங்களில் ஒன்றை பூசித்து வருதல், 5.வைணவ திரு மந்திரத்தை உபதேசித்தல்
Comments
Post a Comment