134. பார்த்தால் பசி-அடங்கிப் போகுமா(ஆடப்பிறந்தவளே ஆடி வா)



ஆயிரம் முறை-நீ, கடைபிடிக்காமல் படிப்பதால் பயனுமில்லை
கீதையைக்-கற்றே நீ-முடித்தாலும் படிப்பொன்றால் பலனுமில்லை
பூணுவாய் பூணுவாய் பூணுவாய் (2)
_____________

பார்த்தால் பசி-அடங்கிப் போகுமா 
வெறும் ஏட்டுப் படிப்பிருந்தால் போதுமா
கூறுவாய் .. கூறுவாய் .. கூறுவாய் 
(2)
(MUSIC)
விதையின்றி கொடி-தோன்ற முடியாதம்மா 
குழல் இசை-போற்றிக் கவிபாட அது-ஊதுமா
(2)
கதை-கேட்டுப் பாராள முடியாதம்மா (2)
நீ விழுந்தன்றே படிச்சாச்சே செயலாக்குவாய் ..
ஓடி வா.. ஓடி வா.. ஓடி வா
பார்த்தால் பசி-அடங்கிப் போகுமா 
வெறும் ஏட்டுப் படிப்பிருந்தால் போதுமா

கூறுவாய் .. கூறுவாய் .. கூறுவாய்
(MUSIC)
மயிலாட்டம் கண்டாலே திறன்-தோன்றுமோ 
மாங்குயில்-பாடக் கேட்டாலே குரல்-தேறுமோ
(2)
செயல்பாடு இல்லாமல் படிப்பே-நன்றோ 
அட நீ-கற்ற கல்விக்குப் பலன்தான்-என்றோ
கூறுவாய் .. கூறுவாய் .. கூறுவாய் 
(MUSIC)
கற்கப் பின் நிற்க-எனக் குறளல்லவோ
கடைப் பிடிக்காமல் படித்தல்-மட்டும் வீணல்லவோ
(2)
இயலுக்கும் இசைக்கூட்டும் நடிப்பல்லவோ (2)
வெறும் ஏட்டினில்-உதவாது படிப்பல்லவோ
தேறுவாய்.. தேறுவாய்.. தேறுவாய்
பார்த்தால் பசி-அடங்கிப் போகுமா 
வெறும் ஏட்டுப் படிப்பிருந்தால் போதுமா 
கூறுவாய் .. கூறுவாய் .. கூறுவாய்



Comments