133 வேளைக்கொரு சேதி (ஆளுக்கொரு தேதி)



நாக்கே உனக்கென்ன தீராத பசியோ
நீ பண்ண-வம்பு பத்தலையோ அடங்கிடவில்லையோ
பண்ண-வம்பு பத்தலையோ அடங்கிடவில்லையோ 
__________________

வேளைக்கொரு சேதி-சொல்லிச் சிலர்-தினம் அலைவார்
வம்புக்கு-அலைவார்  
(1+SM+1)
அதால் யார்-மடிந்தால் அவருக்கென்ன சிந்தனை புரியார்
அதால் யார்-மடிந்தால் அவருக்கென்ன சிண்டினை முடிவார்
வேளைக்கொரு சேதி-சொல்லிச் சிலர்-தினம் அலைவார்
வம்புக்கு-அலைவார்
(MUSIC)
காலையிலே விழிக்கையிலே தொடங்கிடுவார் பாரும்
மாலை-தூங்கப் போகும்-வரை வம்புக்குத்தான் நேரம்  
வேறெதற்கும் தூங்கும்-வரை அவர்க்கு-இல்லை நேரம்
வேளைக்கொரு சேதி-சொல்லிச் சிலர்-தினம் அலைவார் 
வம்புக்கு-அலைவார்
(MUSIC)
கூறியவரை திருத்திடவே யாராலே ஆகும்
கூறுவோரைத் தாக்குமவர் பொல்லாத-கோபம் (2)
(SHORT MUSIC)
புத்தி-சொல்ல வாயைக்-கொஞ்சம் தொறந்துப்புட்டா போச்சு (2)
வந்து-உடன் தாக்குமன்றோ வீச்சறிவாப்-பேச்சு (2)
வத்திக்குச்சி இல்லாமே பத்திக்கிட்டு-எரியும்
(1+ஆ ..+1)
உன்னைப் பத்தி-இல்லாத வதந்தி என்ற நெருப்பும்
உன்னைப் பத்தி பொல்லாத வதந்தி வெளியில் கிளம்பும்
வேளைக்கொரு சேதி-சொல்லிச் சிலர்-தினம் அலைவார் 
வம்புக்கு-அலைவார்
வம்புக்கு-அலைவார் (2)




Comments