125 நித்தம் காசைத் தேடி அலைவது (புத்தன் ஏசு காந்தி பிறந்தது)

நித்தம் காசைத் தேடி-அலைவது ஏன்-இன்னும் எதற்காக
தோழா ஏனோ-எதற்காக
(MUSIC)
நஞ்சை புஞ்சை என்று-நீ பூமியைச் சேர்ப்பது எதற்காக
காலம் முடிந்து ஆறடி-மண்ணே இருக்குது உனக்காக
ஏய்க்கும் நரிபோல் பிழைப்பு-நடத்திச் சேர்ப்பது எதற்காக
வானம் ஏகும் நாளில்-காற்றும் இருக்கோ மூச்சாக
நித்தம் காசைத் தேடி-அலைவது ஏன்-இன்னும் எதற்காக
தோழா ஏனோ-எதற்காக
(MUSIC)
சுழல்கின்ற-வாழ்வு ஸ்திரம்-என்று கொண்டு
தளை-என்ற கோது தனை-நன்கு கொண்டு
இருள்-கொண்ட போது உனக்காக-என்று
எதிர்காலம்-என்றும் இருக்காதோ நொந்து
உண்மை என்று-பேர் கொண்டு வந்த-நல் தெய்வத்தின் மொழியாகும்
கண்ணனாகப்-பார் வந்து போர்-ரதம் நின்றவன் மொழியாகும்
நித்தம் காசைத் தேடி-அலைவது ஏன்-இன்னும் எதற்காக
தோழா ஏனோ-எதற்காக
(MUSIC)
பொருள்-தேடும் நெஞ்சே அருள்-வேண்டி நில்லு
இருள் போக்கும்-உண்மைப் பொருள்-தேடிச் செல்லு
மனம்-என்ற கோவில் இருக்கின்ற தெய்வம்
தனை-விட்டு தூரம் செல்வதென்ன கோரம்
எவருள்ளும்-ஆண்டவன் இருப்பது-என்பது அவர்களின் தவறு-இல்லை
வேலையொன்றில்லா இறைவனுக்கன்றோ போக்கிடம் வேறு இல்லை
நித்தம் காசைத் தேடி-அலைவது ஏன்-இன்னும் எதற்காக
தோழா ஏனோ-எதற்காக
நஞ்சை புஞ்சை என்று-நீ பூமியைச் சேர்ப்பது எதற்காக
காலம் முடிந்து ஆறடி-மண்ணே இருக்குது உனக்காக
நித்தம் காசைத் தேடி-அலைவது ஏன்-இன்னும் எதற்காக
தோழா ஏனோ-எதற்காக

முதல் பக்கம் Part II

Comments