124 என்ன-வரம் கேட்டிடுவேன்(அந்தரங்கம் நானறிவேன்) **




என்ன-வரம் கேட்டிடுவேன் சொல்லு-நல்ல ஆரணங்கே
(2)
உன்-மனத்தின் சாந்தி-ஒன்றே வேண்டிப்-பெற வேண்டுவதே (2)
இந்த-மொழி நானில்லையே சொன்னதந்த வாலறிவே (2)
வேண்டுவது சாந்தி-ஒன்றே அந்த-வரம் வேண்டிடுவாய் 
(MUSIC)
கோடிச்-செல்வம் சொன்னதெல்லாம் கேட்கும்-மக்கள் செல்வம்
அந்த நோயின்-துன்பம் அற்ற-நிலை அன்றோ-கேட்க வேண்டும்
(2)
கேட்டதெல்லாம் பெறுவதெல்லாம் எதற்கு-என்று தாங்கள் (2)
கணமேனும் யோசியுங்கள் அமர்ந்து-நன்கு போங்கள்
பொன் வரமா நன்மையல்லவா
சாந்தி வருமா சாந்தி-வேணுமா
என்ன-வரம் கேட்டிடுவேன் சொல்லு-நல்ல ஆரணங்கே
 (MUSIC) 
தாமரையின் மீதிருக்கும் நீரதனைப் போலே  
நான் வாழும்-நிலை வேண்டுதலின் மேலோ-மனச் சாந்தி 
(2)
அடடா-நீ சரணடைதல் சாதனையே ஆகும் (2)
அதைப்-பூண வேண்டுவது சாந்தி-மனம் ஆகும்
பொன் வரமா இல்லை-இல்லை மா
சாந்தி வரமா இன்னும் ஐயமா
என்ன வரம் வேண்டிடுவேன் என்று இன்று கண்டு கொண்டேன்
சாந்தி-மனம் யாவும் பெறும் முக்தி-தரும் போதம்-எழும்  

என்ன வரம் வேண்டிடுவேன் என்று இன்று கண்டு கொண்டேன்




முதல் பக்கம் Part II


Comments