123. பல நாள் ( ஒரு தாய் வயிற்றில் )



பல நாள்-கெடுக்கும் இந்த நாள்-படுத்தும்  
என நீ-தவிர்த்தால் எந்த செயல்-நடக்கும்
(2)
நல்ல நாட்களுக்குள்-உள்ள நேரத்தையும்
சில பொல்லதென்றால் ரொம்ப அது-சிரமம்
பல நாள்-கெடுக்கும் இந்த நாள்-படுத்தும்  
என்று நீ-தவிர்த்தால் எந்த செயல்-நடக்கும்
(MUSIC)
 நாளும் அதிகாலை வந்து-அதுபோகும் மாலை தனில்-சூரியன்
நாளை அதுபார்த்து வேலை தனைச்-செய்தால் ஏது உயிர்-காரியம்
நல்ல-நாள் என்று-நீ இன்றினைக் கூறினால்
நாளை நல்லதாகும் இன்று-செய்தே பாரடா
பல நாள்-கெடுக்கும் இந்த நாள்-படுத்தும்  
என நீ-தவிர்த்தால் எந்த செயல்-நடக்கும்
 (MUSIC)
உடலில்-உயிர்மூச்சு மனிதன்-கண்தூங்கும் போதும்-செயலாற்றுது
நேரம் வரும்-என்று அதுவும்-எதிர்நோக்க தூக்கம்-சதமாகுது
இக்கணம் நற்கணம் என்று-செய் மானிடா
யாவும் நல்ல-நாளே என்று-கருமம் பூணடா
பல நாள்-கெடுக்கும் இந்த நாள்-படுத்தும்  
என நீ-தவிர்த்தால் எந்த செயல்-நடக்கும்
 (MUSIC)
கண்ணில் திரை-கொண்டு அந்த-காந்தாரி பெண்மை வழி-காட்டினாள்
துரியன்-நேராகும் நாளை-எதிர்பார்த்து திருதன் வழிமாறினான்
(2)
உன்னிடம் என்னிடம் உள்ளதே சத்தியம்
எல்லாம் நல்ல..தென்றால் வெற்றி உண்டாம்-நிச்சயம் (2)
பல நாள்-கெடுக்கும் இந்த நாள்-படுத்தும்  
என நீ-தவிர்த்தால் எந்த செயல்-நடக்கும்
நல்ல நாட்களுக்குள்-உள்ள நேரத்தையும்
சில பொல்லதென்றால் ரொம்ப அது-சிரமம்
பல நாள்-கெடுக்கும் இந்த நாள்-படுத்தும்  
என்று நீ-தவிர்த்தால் எந்த செயல்-நடக்கும்


முதல் பக்கம் Part II

Comments