122. வ்யர்த்தமன்றோ(அர்த்தமுள்ள இந்து மதம்)


வ்யர்த்தமன்றோ நீயும்-பல நூல்கள்-கற்..றது
(1+SM+1)
அதுத் திமிரினைக் கொடுக்குமென்றால் எதற்குக்-கற்றது
காசுபணம் சேர்ப்பதற்கே படிப்பு-உதவுது (2)
என்றால் * காசுவிட நீ-எதனை எங்கு-கற்பது
வ்யர்த்தமன்றோ நீயும்-பல நூல்கள் கற்றது
(MUSIC)
கணமும் பணம்-தேடி நீ காசுபின்-ஏன் அலைவது
அற்பப்-பணம் காசுக்கென்றா நீயும்-நாளும் கற்றது
கணமும் பணம்-தேடி நீ காசுபின்-ஏன் அலைவது
அற்பப்-பணம் காசுக்கென்றா நீயும்- நாலும் கற்றது
நெஞ்சடங்கிப் பிங்கலையும் இடையும்-என்று சேர்வது (2)
குண்டலினி எழுப்பும்-வித்தை காசுக்கெங்கு கிட்டுது
வ்யர்த்தமன்றோ நீயும்-பல நூல்கள் கற்றது
(MUSIC)
படைத்தவன் தந்ததுவோ அறிவுப்பசி
அதற்குக் காசுதந்து காட்டிவிட்டாய் பணத்தின் ருசி  
(2)
நல்லதெல்லாம் எதற்காக நீ-படித்தாய்
(1+SM+1)
இன்னிக்கே நீ-யோகம் கொள்வது-போல் ஏன்-நடித்தாய்
வ்யர்த்தமன்றோ நீயும்-பல நூல்கள் கற்றது
(MUSIC)
உயிர்விட்டு நல்ல-கல்வி கற்றோர் பெற்றதெல்லாம்
உயிரின்றி இருக்கும்-வெள்ளி பொன்னும்-மணியுமடா
(2)
இந்திரனின் சொர்க்க-சுகம் பொன்-தனத்தில் வந்ததடா
தான்-படித்த கல்வியிடம் உன்மதிப்புப் போனதடா
உன்மதிப்புப் போனதடா
வ்யர்த்தமன்றோ நீயும்-பல நூல்கள் கற்றது
அதுத் திமிரினைக் கொடுக்குமென்றால் எதற்குக்-கற்றது


* காசு = கோது/குற்றம்/அறியாமை



முதல் பக்கம் Part II


Comments