எல்லாமும் ஒன்றே-என்று கண்டு-கொள்-நெஞ்சே
உந்தன் சிறிய-கு..ணத்தை-இன்றே விட்டுத்தள்-நெஞ்சே
(1+SM+1)
எச்சமய..மும்-சமமே என்று கொள்-நெஞ்சே (2)
அந்த ஈசனுக்கும்-ஏசுவுக்கும் வேற்றுமை எங்கே (2)
எல்லாமும் ஒன்றே-என்று கண்டு-கொள்-நெஞ்சே
உந்தன் சிறிய-கு..ணத்தை-இன்றே விட்டுத்தள்-நெஞ்சே
(MUSIC)
எத்தனை முறை-கேட்டாய் காதினில்-நன்றே
அப்போதே அதை-விட்டாய் காற்றினில்-நெஞ்சே
(2)
வெட்டி-விழும் ஆத்திரத்தை விட்டிடு-நெஞ்சே
மண்ணில் ஒட்டி-உற..வாடும்-தன்மை கொண்டிரு-நெஞ்சே (2)
எல்லாமும் ஒன்றே-என்று கண்டு-கொள்-நெஞ்சே
உந்தன் சிறிய-கு..ணத்தை-இன்றே விட்டுத்தள்-நெஞ்சே
(MUSIC)
ஆண்டவன் ஒன்று-என்றே நன்கு-உணர்வாய்
போட்டி கொண்டே-பொருதும் தன்மை-விடுப்பாய்
சாத்திரத்தில் சொல்லவில்லை அந்த-பேதம்
உன்-ஆத்திரத்தில் தோன்றுவதோ சொந்த-நாசம் (2)
எல்லாமும் ஒன்றே-என்று கண்டு-கொள்-நெஞ்சே
உந்தன் சிறிய-கு..ணத்தை-இன்றே விட்டுத்தள்-நெஞ்சே
(MUSIC)
மைதிலி நாதன்-அன்பே என்..று-சொல்வாய்
ஒரு-காட்டேரி போல-பின்னே மல்லுக்கு-நிற்பாய்
(2)
ஐயஹோ ஓர்-நொடியில் கருணை என்பாய்
நீ மறு-நொடியில் அதனை-நெஞ்சே மறந்து-செல்வாய்
ஒரு காவாலி போல-நெஞ்சே மறந்து-செல்வாய்
எல்லாமும் ஒன்றே-என்று கண்டு-கொள்-நெஞ்சே
உந்தன் சிறிய-கு..ணத்தை-இன்றே விட்டுத்தள்-நெஞ்சே
Comments
Post a Comment