120 மந்திரங்கள் அறிந்திலனே (அந்தரங்கம் நானறிவேன்)





(ஆன்மீக வினா விடை )

மந்திரங்கள்-அறிந்தி...லனே சாத்திரம்-ப...டித்தி..லனே (2)
உன்-மனத்தைப் பேணுவதே மந்திரத்தின் சாரமதே (2)
அன்பு-மனம் பூணுவதே சாத்திரமென்..றே-அறிவாய் (2)
மந்திரமும்-சாத்திரமும் அன்பு-அன்றி கூறலையே
(MUSIC)
கோவிலிலே சிலையைக்-கண்டு மூடிக்-கொண்ட கண்கள்
ஒரு கணத்துக்கு-மேல் நினைப்பதெல்லாம் சூடாய்-வெல்லப் பொங்கல்
(2)
கணப்-பொழுதே-ஆகிடினும் உன்-மனத்தில் ஏங்க
கணப்-பொழுதே-ஆகிடினும் நன்-மனத்தில் ஏங்க
அவன்-ஓடி வந்திடுவான் உன்னைக்-கையில் ஏந்த
இன்னும் சொல்லவா உண்மையாகவா
 இன்னும் ஐயமா *என்னைக்கூடவா
மந்திரங்கள்-அறிந்தி...லனே சாத்திரம்-ப...டித்திலனே
(MUSIC)
சாதனையை நான்-புரிந்து ஆண்டவனைத்-தேடி
அவன் தாள்-தெரிந்து உய்வதெங்கே நானோ-ஒரு பாவி
(2)
அறிவாயே சேவையுமே சாதனையே ஆகும்
புரிவாயே சேவைதனை சாதனையைப் போலும்
அலைமோதும் உன்-மனமும் சேவையொன்றால் ஆறும் 
இன்னும் சொல்லவா உண்மையாகவா
 இன்னும் ஐயமா *என்னைக்கூடவா
மந்திரங்கள்-அறிந்தி...லனே சாத்திரம்-ப...டித்திலனே
மந்திரங்கள்-அறிந்தி...லனே சாத்திரம்-ப...டித்திலனே

*என்னைக்கூடவா இறைவன் கண்டு கொள்வான் ? .( உன்னைவிடவா அவனுக்கு மற்றவை பெரிது..! )







Comments