117 என்-திறத்தில் (அந்தரங்கம் நானறிவேன்) **




தன்-திறத்தில் ஏதுமில்லே என்றென்-நெஞ்சம் உணரலியே (2)
மந்திரத்தில் மாங்கனிகள் வீழும்-என்று நினைக்கிறதே
மந்திரத்தில் மாங்கனிகள் வீழும்-என நினைக்கிறதே
சொந்தமென்று நினைக்கிறதே தன்னறிவைத் தான்-பெரிதாய் (2)
என்-திறத்தில் ஏதுமில்லே என்றென்-நெஞ்சம் உணரலியே
(MUSIC)
நாடியதை விலையைத்-தந்து வாங்கிக்-கற்ற நெஞ்சம்
அந்த-தெய்வத்தையும் விடுவதில்லை பேரம்-பேசிக் கெஞ்சும்
(2)
படைத்தவனைக் காசு-தந்தே பெறுவதில்லை பூஜை (2)
*இலை-போதும் என்பதுதான் கண்ணனவன் கீதை
என்-நெஞ்சமே உண்மை-கொஞ்சமே
கண்டு-கொள்ளவே நேரம்-வந்ததே
தன்-திறத்தில் ஏதுமில்லே என்றென்-நெஞ்சம் உணரலியே
(MUSIC)
தாமரையின் இதழ்-விரியத் தெரியும்-ஒரு சேதி
அந்த-சாதனையைப் புரியக்-கிட்டும் தானே-அனு..பூதி
(2)
அறிவாய்-என் மூடமதே திரிந்ததெல்லாம்-போதும் (2)
அலைமோதும் எண்ணங்களை அடக்கச் செய்-நீ த்யானம்
என் நெஞ்சமே உண்மை கொஞ்சமே
கண்டு கொள்ளவே நேரம் வந்ததே
என்-திறத்தில் ஏதுமில்லே என்றென்-நெஞ்சம்  உணரலியே
என்-திறத்தில் ஏதுமில்லே என்றென்-நெஞ்சம்  உணரலியே
ஆஆஆ.. ஆஆஆ…






Comments