இமை-மூடி ஓய்ந்தால் உலகெங்கு நெஞ்சே
யம-பாசம் பாய்ந்தால் உறவேது எண்ணேன்
(2)
(MUSIC)
வெறியாட்டம் போதும் உடல்-வாடிப் போகும் (2)
விலை-கோடிக் கோடித் தந்தாலும் சாகும்
நிலையாக ஊனை நினைத்தாடலாமா
புரியாத போக்கை நீ-கொள்ளலாமா
இமை-மூடி ஓய்ந்தால் உலகெங்கு நெஞ்சே
யம-பாசம் பாய்ந்தால் உறவேது எண்ணேன்
(MUSIC)
அவன்-நாமம் ஒன்றே அருளாதோ-மாட்சி (2)
அவன்-பாதம் செய்யும் உலகெங்கும்-ஆட்சி
புவியேழு செய்தே அதில்-தன்னைப் பெய்தே
இமைபோலக் கண்ணே *உனைக்காப்பதொன்றே
இமை-மூடி ஓய்ந்தால் உலகெங்கு நெஞ்சே
யம-பாசம் பாய்ந்தால் உறவேது எண்ணேன்
* உனைக்காப்பதொன்றே தொன்றே= ஆன்மாவாக உனைக் காப்பது ஒன்றான இறைவன்
Comments
Post a Comment