106. உனக்கொரு துயர் (எனக்கொரு மகன் பிறப்பான்)

(#** எனக்கொரு மகன் பிறப்பான்) (* இறை நாம மகிமை)
உனக்கொரு துயர்-வருமா அந்த ராம நாமத்தை உரைத்தால்
எனக்கென்ன-என்றே இருக்காமல்-என் மனதே தினமதை உரைப்பாய்
(1+SM+1)
(MUSIC)
என்றும் அவன்-நாமம் ராம ராம்-ராம என்று நீ-சொல்லி அழைப்பாய்
தங்கக்-கம்பியாய் உன்னை-நாமமே மாற்றி..டும்-வரை உரைப்பாய்
(2)
புனித நீராடி *மனித நெறி-தந்த குரலில் அருள்-நாடி உரைப்பாய்
கோளை-அறுக்கின்ற ராமன் எனும்-நாமம் –
கேட்டு யமன்-ஓடிச் செல்வான்
ராமன் உனைப் பார்த்துக் கொள்வான்
உனக்கொரு துயர்-வருமா அந்த ராம நாமத்தை உரைத்தால்
எனக்கென்ன-என்றே இருக்காமல்-என் மனதே தினமதை உரைப்பாய்
(MUSIC)
கல்லைப் பெண்ணாக்கி சபரிக்கருள் செய்து
கையில் வில்கொண்ட பெருமான் + (SM)
மந்தி துணை-கொண்டு கடலில் அணை-செய்து
இலங்கை வென்றிட்ட பெருமான்
(2)
கல்லில் தேரைக்கும் புல்லின் கோரைக்கும்
உணவைத் தான் கொண்டு கொடுப்பான்
மூப்பில் உடல்-செத்து வீழும்-அந்நாளில்-
முக்தி பேறளித்துக் காப்பான்
முக்தி பேறளித்துக் காப்பான்
உனக்கொரு துயர்-வருமா அந்த ராம நாமத்தை உரைத்தால்
எனக்கென்ன-என்றே இருக்காமல்-என் மனதே தினமதை உரைப்பாய்
ராம ராம்..ராம ராம்..ராம ராம்...ராம ராம்..(2)
*மனித நெறி = அன்பு

 முதல் பக்கம் Part II

Comments