239. எதற்கும் நானே என்றாலே(நிலவே என்னிடம் நெருங்காதே) **

எதற்கும் நானே என்றாலே அந்த நானில் நானே குறையாகும் (2)

எதுவும் நானே என்றாலே அந்த நானில் நானே இறையாகும்

எதற்கும் நானே என்றாலே அந்த நானில் நானே குறையாகும்

(MUSIC)

நானில் நானாய் எதுவாகும் அந்த நானெனும் உணர்வே ஏதாகும் (2)

என்றிடும் தேடல் பயனாகும் அது சாதனையின்-முதல் படியாகும் 

எதற்கும் நானே என்றாலே அந்த நானில் நானே குறையாகும்

(MUSIC)

ஆணவ உணர்வே நானாகும் அதில் தானெனும் சுயநலம் குறையாகும் (2)

மானவ உயர்வே நினைப்பாகும் நிலை வந்திடத் தோன்றிடும் நிறைவாகும் 

எதற்கும் நானே என்றாலே அந்த நானில் நானே குறையாகும்

(MUSIC)

ஆணவம்  ஓர் அவம் ஆகாதோ பெண்ணின் தாய் மனம் ஓர் தவம் ஆகாதோ

ஆணவம்  ஓர் அவம் ஆகாதோ அந்த தாய் மனம் ஓர் தவம் ஆகாதோ

தேனென ஓர் மொழி போதாதோ ***அதில் தானென இறையும் தோன்றாதோ 

எதற்கும் நானே என்றாலே அந்த நானில் நானே குறையாகும்

எதுவும் நானே என்றாலே அந்த நானில் நானே இறையாகும்

எதற்கும் நானே என்றாலே அந்த நானில் நானே குறையாகும்

------------------------------------------------------------------

1)
எதற்கும் நானே என்றாலே அந்த நானில் நானே குறையாகும்
எதற்கும் நானே என்னும் EGO குறையாகும்
*அந்த நானில் நானே குறையாகும் = இதில் நானில் நான் என்பது ,நான் + இல்(இல்லாத)   நானில்லாத நான்.அதாவது உண்மையான நான் என்னும் ஆத்ம உணர்வு இல்லாத உடலைத் தான் என்று நினைக்கும் குறுகிய எண்ணம் (EGO) குறையாகும் 
எதுவும் நானே என்றாலே அந்த நானில் நானே இறையாகும்
எதுவும் நானே என்று எதிலும் தன்னைப் பார்க்கும் பரந்த மனப்பாங்கு  இறைத் தன்மையாகும். அதாவது மற்றெல்லாரிடமும் தன்னைக் காண்பது, அவர்கள் நிலையில் தன்னை வைத்துக்காண்பது உயர் நிலைக்கு இட்டுச் செல்லும்.குறைந்த பட்சம் மனித நிலையிலாவது நம்மை வைத்திருக்கும். அந்த மனித தன்மை இல்லாது போனால் ஐந்தறிவின் பாற்பட்ட பிறப்பே அடுத்த ஜென்மங்களில் வாய்க்கும் என்பது ஆன்மிக உண்மை..
2)
நானில் நானாய் எதுவாகும் அந்த நானெனும் உணர்வே ஏதாகும்
என்றிடும் தேடல் பயனாகும் அது சாதனையின்-முதல் படியாகும் 
3)
ஆணவ உணர்வே நானாகும் அதில் தானெனும் சுயநலம் குறையாகும்
நான் எனும் ஆணவ உணர்வால் ஏற்படும் சுயநலம் ஒரு பெரிய குறையே ஆகும். அப்படி இருப்போர்க்கு அந்த குறை தெரியாதது மட்டுமல்ல, அது வளர்ந்து கொண்டே போகும் என்பது தான் அச்சம் தரும் விஷயம் ஆகும்.
4)மானவ உயர்வே நினைப்பாகும் நிலை வந்திடத் தோன்றிடும் நிறைவாகும்
மனித குலம் ஒட்டுமொத்தமாய் உயர்வடையும்போதே நிறைவு தோன்றும்.இந்த உணர்வு நம் குடும்பம் என்ற சிறிய வட்டத்திலிருந்து சிறிது சிறிதாக உற்றார் உறவினர்,அறிந்தோர் அறியாதோர் எனப் பறந்து விரிந்தாலே மோக்ஷம். அது வரையில் தோஷம் தான்.
4)
ஆணவம்  ஓர் அவம் ஆகாதோ பெண்ணின் தாய் மனம் ஓர் தவம் ஆகாதோ
ஆணவம் சுபமற்ற அவம் (கீழ் நிலைப் படுத்தும்) ஆகும்.
**** பெண்ணின் தாய் மனம் ஓர் தவம் ஆகாதோ=பெண்களின் தாய் மனத்தின் அன்பே இறைத்தன்மையாகும் அந்த இறைத்தன்மையைக் கொடுக்கும் தாயன்பைத் தவிர யோகசாதனை எதுவும் தேவையில்லை. அந்தத் தாய்மையற்ற பெண்மைக்கு எந்த விதமான யோக/ லோக சாதனையாலும் பயன் இல்லை. பெண்களை சக்தியின் வடிவம் என்று குறிப்பிடுவதே இந்த அன்பின் சக்தியைத் தான்.
பெண்களின் உயர்வைக் கருத்தில் கொண்டுதான் பெண்ணவம் எண்ணாமல் ஆணவம் என்று குறிப்பிட்டார்களோ.பெண்களே,ஆணவம் என்பது பெண்களுக்கு உரித்தானதல்ல.எனவே அதை விட்டுத்தள்ளுங்கள் என்று சொல்கிறார்களோ?
தேனென ஓர் மொழி போதாதோ ***அதில் தானென இறையும் தோன்றாதோ 
அன்பான வார்த்தைகளைத் தவிர வேறெந்த சாதனையும்,உபாசனையும் தேவையில்லை. அன்பற்ற வார்த்தைகளை உடையவர்க்கு வேறெந்த சாதனையாலும் பயன் இல்லை.
 ***அதில் தானென இறையும் தோன்றாதோ (சிலேடை ) =
1)அன்பில் தானாக இறைவன் தோன்றும் 
2) அன்பில் ஆத்ம சாக்ஷத்காரம் என்னும் தன்னுணர்வு ஏற்பட்டு உண்மையான நான் யார் என்று விளங்கி இறை அனுபூதி கிட்டும்

முதல் பக்கம் Part II

Comments