210 உலகினில் இதுபோல்(#** ஹரிஹரி கோகுல ரமணா) (* கீதை)



உலகினில் இதுபோல் உண்டா கீதையைப்
போலொரு போதமும் உண்டா

பேருலகினில் இதுபோல் உண்டா கீதையைப்
போலொரு போதமும் உண்டா
(4)
(MUSIC)
பாரதப் போரா ஆலயம் ஈதா
என ஐயம் கொளத்தானே
(2)
நல் கீதையை உரைத்தானே
பேருலகினில் இதுபோல் உண்டா கீதையைப்
போலொரு போதமும் உண்டா
(3)
உண்டா.. உண்டா.. உண்டா.. உண்டா
(MUSIC)
ஞானம் எழத் தன்னால்  போரின் களத்திடையே
நானும் நீயும் கடைத்தேறும் வழியெனவே
த்யானத்தில் உயிர் விளக்கம் கொள்ளுதல் போல் நன்றாய்
தானே குருவாகி  உயர வைக்கும் உரையாகி
வாழும் கலையல்ல வாழ்வை-நல் கலையாக்கி போதித்தான் அன்று நமக்காய் களம் தன்னில்
நாமும் படித்தே உயர்தல் வேண்டாமா என நாளும் அதைக் கொண்டே உய்வோம்   நம்  வாழ்வினிலே 
உலகினில் இதுபோல் உண்டா கீதையைப்
போலொரு போதமும் உண்டா

பேருலகினில் இதுபோல் உண்டா கீதையைப்
போலொரு போதமும் உண்டா

(4)



முதல் பக்கம் Part II

Comments