மன்னவன் வந்தானடி*** (Org Lyrics with Jathi)




கலை மகள் துணை கொண்டு கலை வென்று
புகழ் கொண்ட காவலன் வாழ்க வாழ்க
(MUSIC)
மலை மகள் வரம் கொண்டு மலை போன்ற
பலம் கொண்ட மன்னவன் வாழ்க வாழ்க
(MUSIC)
திரு மகள் அருள் கொண்டு பொருள் கொண்ட
திருவருட் செல்வனே வாழ்க வாழ்க
(MUSIC)
இயல் இசை நாடகம் முத்தமிழ் காக்கின்ற
தலைவனே வாழ்க வாழ்க
(MUSIC)
குடி மக்கள் மனம் போல முடியாட்சி
காண்கின்ற கொற்றவா வாழ்க வாழ்க
(MUSIC)
நின் கொடி வாழ்க படை வாழ்க குடி வாழ்க
குலம் வாழ்க நலமும் பல்லாண்டு வாழ்க
(MUSIC)
மன்னவன் வந்தானடி தோழி
(Short Music)
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
(2)
மன்னவன் வந்தானடி
மாயவனோ … தூயவனோ … நாயகனோ .. நானறியேன்
மாயவனோ தூயவனோ நாயகனோ நானறியேன்
மன்னவன் வந்தானடி தோழி
(MUSIC)
செந்தமிழ்ச் சொல் எடுத்து இசை தொடுப்பேன்
வண்ண சந்தத்திலே கவிதை சரம் தொடுப்பேன்
(1+Short Music+1)
மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன் (2)
இனி.. முப்பொழுதும் கற்பனையில் அற்புதமாய் வாழ்ந்திருக்கும்
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி
(MUSIC)
தூவிய பூவினில் மேனிகள் ஆடிட
நாயகன் நாயகி பாவனை காட்ட வரும்
மன்னவன் வந்தானடி
 ( ஜதி-1 ) 4:19
தத்தித்-தாங்கிட தகதரி-கிடதம்
தித்தித்-தாங்கிட தகதரி-கிடதம்
தகதித் தாங்கிட தகதரி-கிடதம்
தித்தித்-தாங்கிட தகதரி-கிடதம்
தகதரி-கிடதம் (4)
தரி-கிடதம் (4) த-த் தா

ச .. ரி .. க .. ம .. ப .. த . . நி …..
சரிகமபதனி சுரமோடு ஜதியோடு
நாத கீத ராக பாவம் தான் பெறவே
மன்னவன் வந்தானடி
( ஜதி-2 ) 4:43
தக்க-தின்னம் ததிகு தகஜினக்கு  குகு தத்கு குகுதகிட தத் திங்கு தகஜினக்கு தத் திம்
தத்-தகிட கிடதகிடதகிடதோம் தக தகிட  கிடதகிடதகிடதோம் த கிடதத்தோம்  கிடதத்தோம்  கிடதத்தோம்  தத் தா

காதற்  கவிதை கடலெனப் பெருகிட
மாதர் மனமும் மயிலென நடமிடவே
மன்னவன் வந்தானடி
( ஜதி-3 ) 5:02
தத்-தக்கு தத்-தண்ண தஜுண்ணு தஜுண்ணு தஜ்ஜுண்ணு  தத்-திம்மி
ஜூணு தஜ் ஜூணு தத்கிட தீம் தாங்கிடதகு தரிகிடதக தாம்
 கிடதாங்கிடதகு தரிகிடதக தாம்
தகத்தித் தாங்கிடதகு தரிகிடதக தத் தா

சிறு மலர் மனமொரு குறு நகை நலம் பெற
மலர்விழி சிவந்திட கனி இதழ் கனிந்திடவே
மன்னவன் வந்தானடி
( ஜதி-4 ) 5:20
திருகிடதரிகிட  தரிகிடதிருகிட 
திருகிடதரிகிட  தரிகிடதிருகிட 
திருகிடதரிகிட  தரிகிடதிருகிட  திருகிடதரிகிட தத் தா

தித்தித்தால் அது செம்பொற் கிண்ணம்
தத்தித் தாவிடும் தங்கக் கிண்ணம்
 ( ஜதி-5 ) 5:30
தாங்கு தத்-தின் தாங்கு தத்-தின் தாங்கு தத்-தின்ன தாங்கிட தகு  தத்-தின்ன தாங்கு தஜ்ஜுண் ணு
தாங்கிடதக தரிகிடதக  தா

சித்தத்தால் ஒரு காதற் சின்னம்
தத்தித் தாவென பாவையின் முன்னம்
என் மன்னவன் …
(MUSIC)
( ஜதி-6 ) 5:44
தத் தித் தா
கிடதக தரிகிடதம் தித் தா கிடதக தரிகிடதம் தா
கிடதக தரிகிடதம் கிடதக தரிகிடதம் தரிகிட தோம் தத் தீம்
தகிட தக ஜூம்  தகிடதக ஜுணு தகிட தத் தா

விரைவினில் நீ .. நீ
மணமலர் தா .. தா
திருமார்பா .. பா
தாமதமா.. மா
மயிலெனைக் கா .. கா

விரைவினில் நீ ..மணமலர் தா .. திருமார்பா .. தாமதமா..
மயிலெனைக் கா ..

நி .. த.. ப.. ம.. க..
நி த ப ம க
நிதபமக
ச … சதமது தரவா
( ஜதி-7) 6:19
தரிகிடதீம் தரிகிடதரிகிடதகு தரிகிடதகு தா
ரி … ரிகமபதநிசா
( ஜதி-8) 6:22
தஜ்..ஜம் தஜ்ஜம் தஜம் தரிகிட தா
க … கருணையின் தலைவா
( ஜதி-9) 6:28
த்ருத தின் .. த்ருத தின்.. த்ருத தின்.. தத்தா
ம … மதி மிகு முதல்வா
( ஜதி-10) 6:31
திரிகட தோம் த திரிகட தோம் த திரிகட தா

ப … பரம் பொருள் இறைவா
த … தனிமையில் வரவா
நி … நிறையருள் பெறவா

ஆளும் புவி எழும் கடல் எழும் நடமாடும் படி வாராய்
அருள் தாராய் ..
(ஜதி-11 Runs Parallel to the song for the above lines)

(ஜதி-12)
திரிகட தோம் த திரிகட தா

ஆளும் புவி எழும் கடல் எழும் நடமாடும் படி வாராய்
அருள் தாராய் ..
அனுதினம் உன்னை வழி படும் மட மயில் இனி ஒரு
தலைவனைப் பணிவதில்லை
(ஜதி-13 Runs Parallel to the song)
மன்னவன் வந்தானடி

( ஜதி-14) 7:03
தகதித் தாங்கிடதகு தரிகிட தக 
தத்தித்  தாங்கிடதகு தரிகிட தக
தரிகிடதோம் (4) தா


________________

Comments