171 எண்ணம் ஓய்வது தூக்கம்(உள்ளம் என்பது ஆமை)

எண்ணம் ஓய்வது தூக்கம் 
அது உள்ளே பாய்வது த்யானம்

எண்ணம் ஓய்வது தூக்கம் அது உள்ளே பாய்வது த்யானம்
உன்னில்-கிடப்பது ஜோதி என்றும்-தூங்கிக் கிடப்பது வ்யாதி
உள்ளே  கிடைப்பது ஜோதி என்றும் தூங்கிக் கிடைப்பது வியாதி
எண்ணம் ஓய்வது தூக்கம் அது உள்ளே பாய்வது த்யானம்
(MUSIC)
த்யானம் ஒன்றால் தான் தெய்வம்
தனை நனி-நன்..றாய்-நீ காண்பாய்
(2)
*உண்டென்றானதும் தூக்கம்
உன்னைக் கண்டால் அது த்யானம்
உண்மை கண்டாலது த்யானம்
எண்ணம் ஓய்வது தூக்கம் அது உள்ளே பாய்வது த்யானம்
(MUSIC)
**இரவில் பிணம்-போல் தூக்கம்
 அஃ..திலையென்..றாலும் பிணம்-தான்
(2)
***நண்பகல் துயில்-போல் தெரியும்
அது த்யானத்தில் ஆழ்ந்திடப் புரியும்
(2)
த்யானம் கொள்ளார்க்கென்ன புரியும்
எண்ணம் ஓய்வது தூக்கம் அது உள்ளே பாய்வது த்யானம்
உன்னில்-கிடப்பது ஜோதி என்றும்-தூங்கிக் கிடைப்பது வ்யாதி
எண்ணம் ஓய்வது தூக்கம் அது உள்ளே பாய்வது த்யானம்

*உண்டென்றானதும்=உண்டு முடித்து ஆனவுடன்
சாதாரண மனிதர்கள் இரவில் பிணம் போல் உறங்குவர்.
அந்த உறக்கம் இல்லை என்றானாலும் விரைவில் பிணமாகி விடுவர்.

**யோகிகள் பகலிலும் கண்மூடி (விழிப்புடன்) இருப்பது அவர்கள் நண்பகல் தூக்கத்தில் இருப்பது போல் உள்ளது என அறிவிலிகள் (தூக்கத்தில் உள்ளவர்கள்)எண்ணுவர்

Comments