(#** புத்தம் புதிய புத்தகமே ) (* இறைஞ்சல்/இறைகெஞ்சல்)
சித்தம்-உதிக்கும் சத்தியமே என்னை மிரட்டித்-தாக்கும் வினையைப் பார்
கருணை சுரக்கும் நெஞ்சுடனே என்னை உருட்டி வதைக்கும் மாயை பார்
அள்ளி யணைத்திடும் தாயெனவே இங்கு இனிதாய் என்னை யாரணைப்பார்
ஏட்டுசுரையில் பாட்டை வடிக்கும் எந்தன் கவியை யார்படிப்பார்
அள்ளி யணைத்திடும் தாயெனவே
(MUSIC)
கெஞ்சும்குரல் கேட்டால்-என்ன கொஞ்சமருள் தந்தாலென்ன
உந்தன்அகம் கல்லா என்ன கொஞ்சும் உள்ளம் கொண்டாலென்ன (2)
உந்தன் விழி பார்த்தாலென்ன நெஞ்சில் இதம் சேர்த்தாலென்ன
மானுடத்தில் வந்தாலென்ன நெஞ்சின் அன்பைத் தந்தாலென்ன
சித்தம்-உதிக்கும் சத்தியமே என்னை மிரட்டித்-தாக்கும் வினையைப் பார்
ஏட்டுசுரையில் பாட்டை வடிக்கும் எந்தன் கவியை யார்படிப்பார்
சித்தம் உதிக்கும் சத்தியமே
(MUSIC)
பொய் களைய வந்தாலென்ன மெய் எடுத்துக் கொண்டாலென்ன (2)
அன்புணவு தந்தாலென்ன பாரும் அதை உண்டாலென்ன (2)
துக்கங்கள்க..ளைந்தாலென்ன உன்பதம்மண் வந்தாலென்ன (2)
உந்தன்மொழி சொன்னாலென்ன எந்தன் துன்பம் கொன்றால் என்ன
Comments
Post a Comment