முந்தை வினைக் கூட்டம் இன்று வந்து வாட்டும்
என்றார் முனிவர்களே ஓ..ஓ..ஓ தந்தார் வழி அவரே
நல்வினையைப் பார்த்து செய்ய அதைப் பார்த்து
போகும் ஊழ்வினையே ஓஓஓ சொன்னார் முனிவர்களே
ஆ..ஆ..ஆ..
முந்தை வினைக் கூட்டம் இன்று வந்து வாட்டும்
என்றார் முனிவர்களே ஓ..ஓ..ஓ தந்தார் வழி அவரே
நல்வினையைப் பார்த்து செய்ய அதைப் பார்த்து
போகும் ஊழ்வினையே ஓஓஓ சொன்னார் முனிவர்களே
(MUSIC)
உன்மனதைப் பார்த்திடுவான் கண்டு-அருள் தன்னை செய்வான் (2)
உந்தன் சக்திக்கா அசைவான் உந்தன் பக்திக்கே இசைவான் (2)
உந்தன் ஐயம் ஏனோ உன் திறத்தில் ஏனோ
இன்றே தொடங்கிடுவாய் ஓஓ ..சேவை தனைப் புரிவாய்
முந்தை வினைக் கூட்டம் இன்று வந்து வாட்டும்
என்றார் முனிவர்களே ஓ..ஓ..ஓ தந்தார் வழி அவரே
(MUSIC)
உன் குணத்தைப் பார்த்தளிப்பன் உன்குலத்தையா நினைப்பான் (2)
உன்னடத்தை நன்று கொள்வான் உன்தனத்திலா மகிழ்வான் (2)
அன்பு கொண்ட சேவை ஒன்று-தானே பூஜை
இன்றே புரிந்திடுவாய் ஓஓ நெஞ்சே புரிந்திடுவாய்
அன்று வந்த கண்ணன் சொன்ன நல்ல கீதை
யார்க்கோ இல்லையன்றோ ஓஓஓ நெஞ்சே உனக்கு அன்றோ
(MUSIC)
கண்ணன்-பேரைச் சொன்ன-பேரை அந்த-யமன் பார்ப்பதில்லை (2)
கண்ணன் வந்து நின்ற-உள்ளம் தன்னில்-கள்ளம் சேர்வதில்லை (2)
இன்னும் என்ன சோகம் சொல்லிவிடு நாமம்
காதில் விழுகிறதோ (2)
கேவிஅழும் கண்ணில் ஓடிவிழும் நீரில் கண்ணா எனஅழையேன்
ஓஓ.. உடனே அருள் புரிவான்
கண்ணா... கண்ணா...கண்ணா...
கண்ணன் அருள் ஓட்டும் உந்தன் வினை மூட்டம்
நெஞ்சே அழைத்திடுவாய்...ஓஓஓ..இன்றே அழைத்திடுவாய்
Comments
Post a Comment