92. இதா பாதை(ஒரே பாடல் உன்னை அழைக்கும்)

 


(#** ஒரே பாடல் உன்னை அழைக்கும்) (* அறியாமை)


ஆஆஆ..

இதா பாதை என்றே மயங்கும்
எந்தன் உள்ளம் நித்தம் கலங்கும்
(2)
எதோ பாதை
(MUSIC)
சாதல்  வரைக்கும்  எனது மோகம்
நெஞ்சில் இருக்கும் நின்றே வதைக்கும்
(2)
மண்ணில் இறங்கித் தன்னில் கிறங்கும் (2)
நெஞ்சில் நிஜம்-தான் என்றோ விளங்கும்? (2)
இதா பாதை என்றே மயங்கும்
எந்தன் உள்ளம் நித்தம் கலங்கும்
எதோ பாதை
(MUSIC)
*ஒன்றைப் பெறவே ஒன்றைக் கொடுப்பேன்
என்றே-உலகில் நன்றே-இருந்தேன்
(2)
**உண்மை பெறவே எதையும் துறவேன்
என்றே அறவே என்னை மறந்தேன்
(2)
இதா பாதை என்றே மயங்கும்
எந்தன் உள்ளம் நித்தம் கலங்கும்
எதோ பாதை
 
Ø * Leading a business like life
Ø ** The heart of sacrifice is needed to know the truth
 
 
 


Comments