91. விண்டிடா விதம் (வெண்ணிலா முகம்)

(#** வெண்ணிலா முகம்) (* இறை நாம மகிமை)
 
 
விண்டிடா விதம் இன்பமே தரும்
நெஞ்சிலாடிடும் ராம மந்திரம்
(2)
அந்த யோகமும் கூடியே வரும் (2)
கிட்டாத பேறல்லவோ ராம் என்ற பேரல்லவோ (2)
விண்டிடா விதம் இன்பமே தரும்
நெஞ்சிலாடிடும் ராம மந்திரம்
(MUSIC)
வாழ்க்கையில் ஒருமுறை சொல்லிட ஏன் தடை (2)
நேரத்தைப் பார்த்திருக்காயோ
நெஞ்சே அழகிய-உலகினில் முழுகிய உன்-உடல்
மெய்யென நினைத்திருக்காயோ (2)
சென்றிடும்-உடல் பொய்யெனப்..படும்
இந்த உண்மையை நெஞ்சமே-அறி
ஆஆ.. விண்டிடா விதம் இன்பமே தரும்
நெஞ்சிலாடிடும் ராம மந்திரம்
(MUSIC)
பொய்யெனும் மெய்-விழ மெய்யெனப் பிறர்-அழ (2)
உன்னுடன் அவர் வருவாரோ
நெஞ்சே உன் உயிர் பிரிகையில் காட்டினில் படுக்கையில்
யாருனைத் தொடர்ந்திடுவாரோ (2)
என்றும் உன்னுடன் வந்திடும் அருள் தந்து காத்திடும் ராம மந்திரம்
விண்டிடா விதம் இன்பமே தரும்
நெஞ்சிலாடிடும் ராம மந்திரம்
(2)
 
 

Comments