88. வானுறை பரமன்(நானொரு குழந்தை)

(#** நானொரு குழந்தை ) (* கண்ணன்)

வானுறை-பரமன் நீர்துயில்-மாலன் வருகை-உலகிலே நிகழ்ந்ததடி
கார்முகில்- மேனி தொழுதிடும்-வண்ணம் கண்ணன்-வடிவிலே இருந்ததடி
(Short Music)

(MUSIC)
யுகம்-தொறும்-தோன்றும் அவன்-அவதாரம் மானுடம்-அறிந்திட முடியாது
(2)
தொடர்ந்திடும்-விதமவன் நடத்திடும்-நாடகம் அவனருளாமல் விளங்காது
(2)
ஐயம்-களைந்தேவா மெய்யை-அறிவோம் வா
துயரம் களைவோம்-வா அவன்-பதம் பணிவோம்வா
வானுறை-பரமன் நீர்துயில்-மாலன் வருகை-உலகிலே நிகழ்ந்ததடி
கார்முகில்- மேனி தொழுதிடும்-வண்ணம் கண்ணன்-வடிவிலே இருந்ததடி
(MUSIC)
ஊனுடம்புள்ளே உறுமதியாலே அளந்திட-முடியா..தவன்-திறனே
(Short Music)
ஆடியகால்களைப் பணிந்துதொழாமல் யார்என்றகேள்விஏன் மானிடனே
நாளும் உருகி-நீ கண்ணனென்..றழைத்தே நாடிடுவாய் அவன்பாதங்களை
(2)
ஐயம்களைந்தேவா மெய்யைஅறிவோம் வா
துயரம் களைவோம்வா அவன்பதம் பணிவோம்வா

Comments