87. உன்னிடத்தில் (உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்)

 
(#** உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்) (* கண்ணன்)
 
உன்னிடத்தில் எண்ணம்-செல்லுமே
கண்ணன் என்று-சொல்லத் துள்ளும்-உள்ளமே
(2)
உனதடி தினம்-நாடி வரும் எண்ணங்கள் பல-கோடி (2)
உன்னிடத்தில் எண்ணம்-செல்லுமே
கண்ணன் என்று-சொல்லத் துள்ளும்-உள்ளமே
(MUSIC)
கூற்றில் நாளும்-நாடே உன்னைப்-புகழ்ந்தே பேசுது (2)
பாட்டில் உந்தன்-தாளை இசையில்-பணிந்தே போற்றுது (2)
உலகத்தில் உனக்கீடு எந்த யுகத்திலும் கிடையாது
அடடா-கண்ணன் எனும்பேர் ஆஆ..நினைத்தால்-கூட இனிப்பே
உன்னிடத்தில் எண்ணம்-செல்லுமே
கண்ணன் என்று-சொல்லத் துள்ளும்-உள்ளமே
(MUSIC)
போதம் என்று கீதை அன்று நீயும் சொன்னது
வேதம் என்று பாதை தன்னை இன்றும் காட்டுது
கண்ணனின் பதம்-பணிந்து அவன் சொல்லிய விதம்-நடந்து
சேவைகள் புரிவாய்-நெஞ்சே..ஆ..ஆ..தேவைகள் உனக்கினி-எங்கே
உன்னிடத்தில் எண்ணம்-செல்லுமே
கண்ணன் என்று-சொல்லத் துள்ளும்-உள்ளமே
(MUSIC)
ஆடல் கண்ட யமுனை இன்னும் இனிதே ஓடுது (1+SM+1)
ஆடல் தன்னைக்-காண நெஞ்சம்-கிடந்தே தவிக்குது (1+SM+1)
யமுனையில் விளையாட்டு நீ செய்ததை தினம் கேட்டு
நானும் வாழ்வேன் இங்கே .. ஆ..நானதைக் காண்பதும் எங்கே
உன்னிடத்தில் எண்ணம்-செல்லுமே
கண்ணன் என்று-சொல்லத் துள்ளும்-உள்ளமே
உனதடி தினம்-நாடி வரும் எண்ணங்கள் பல-கோடி
உன்னிடத்தில் எண்ணம்-செல்லுமே
கண்ணன் என்று-சொல்லத் துள்ளும்-உள்ளமே

 

Comments