ஒரு ஆஸ்திகனுக்கும் நாஸ்திகனுக்கும் இடையிலான சம்பாஷனை
சாமிஇல்லாட்டி ஒருஜோலி இங்கு நடந்திடு..மோ சொல்.. அண்ணேநீ
(2)
சந்திர-சூ..ரியன் அவன்கண்ணே
சந்திர-சூ..ரியன் அவன்கண்ணே இங்கு சுத்துது-பூமி அவனாலே
சாமி-இல்லாட்டி ஒருஜோலி இங்கு நடந்திடுமோ-சொல் அண்ணே-நீ
நடக்குது-யாவும் தன்னாலே
நடக்குது-யாவும் தன்னாலே அதை சாமி செஞ்சான்னு எண்ணாதே
(2)
உடன் திறக்குது-வாயும் ...தம்பீ...அட..தம்பீ...ஆ தம்பி ஆ
திறக்குதுவாயும் தன்னாலே உணவு கையில் நீ-எடுத்த பின்னாலே (2)
சாமிண்ணு சாமிண்ணு சாமிண்ணு ஒண்ணு-இல்ல தம்பீ-
நீ.. ஏமா..றாதே அவன நம்பி
(MUSIC)
ஆதரவாக வருபவன் சாமி
அன்பினைத் தாய்போல் தருபவன் சாமி
(2)
படைத்துப் பின்னிருப்பான் அவனே சாட்சி
தானாய்ப் பிறந்தா வந்தாய்நீ யோசி
நொந்து அழுகிறார் பலர் நூலாகி
அப்போ தம்பீ எங்க-உன் சாமி
(2)
சாமியின் மந்திரம் மூளையைக் கெடுக்கும்
தான்-எனும் உன்திறம் வாழ்க்கையைக் கொடுக்கும் (2)
சாமிண்ணு சாமிண்ணு சாமிண்ணு ஒண்ணு இல்ல தம்பீ
நீ ஏமாறாதே அவன நம்பி
(MUSIC)
என்-திறம் என்பது உன்-திமிர் ஆகும்
இளமை வ..ரை..யில்-தான் உன்னுடன் இருக்கும்
(2)
யமன் வரும்போது பவபயம் தாக்கும்
சாமியின் பேர்-தான் அன்றுனைக் காக்கும்
(2)
*சத்தியம் சொன்னாய் பொன் போலே
புத்தியும் வந்தது உன்னாலே
தீர்த்தாய் சந்தேகம்
(2)
சத்தியம் சொன்னது நானல்ல
சாமியும் உண்மையும் வேறல்ல
அவன்-சொல்லே வேதம்
(2)
சாமி தான்-இனி என் புகலும்
சத்தியம் இனி-நம் துணை-யாகும்
(2)
சாமியும் ப்ரேமையும் வேறில்லை
அந்தராமன்தான் அன்பின்-எல்லை
(2)
ராம்ராம் என-இனி-தினம் அவன்-பெயர் சொல்வோம்
அதைத் துணை-எனக் கொள்வோம் இனி-நாம்
ராம்ராம் எனவே
இனிமேல் துயரே இலையே
அனுதினம் அவன் பெயர் சொல்வோம்
பவபயம் சென்றிட வெல்வோம்
ராம்ராம் என நாமே
சாமி-இல்லாட்டி ஒருஜோலி இங்கு நடந்துவிடாதுண்ணு அறிந்தேனே
ராம்ராம் ராம்-எனச் சொல்வோமே
அந்த பவவினை-நோயினை வெல்வோமே
Ø * யம பயம் வந்தவுடன் நாஸ்திகன் மனம் மாறுகிறான். மரண பயம் இறை நபிக்கையை ஊட்டுகிறது.
Comments
Post a Comment