83. எனது ஆசை எழுந்திடாது(இதய வீணை தூங்கும்போது)

 
 
Click here to listen to the Original Song while Reading

(#** இதய வீணை தூங்கும்போது) (* இறைஞ்சல்/இறை கெஞ்சல்)

எனது ஆசை எழுந்திடாது சென்று அடங்குமா
 
எனது ஆசை எழுந்திடாது சென்று அடங்குமா
எனது நெஞ்சில் ஞானம் தன்னின் ஆட்சி தொடங்குமா
(2)
எனது ஆசை எழுந்திடாது சென்று அடங்குமா
(music)
எனது எனது-என்னும் எண்ணம் மாறுமா
நினது நினது-என்..றே-அதுவும் ஆகுமா
(2)
விளக்கம் படிப்பில் தன்னால் எனக்கே தோன்றுமா (2)
*நோன்பு தன்னை நொந்திடாமல் நோற்க முடியுமா
நோற்க முடியுமா
எனது ஆசை எழுந்திடாது சென்று அடங்குமா
எனது நெஞ்சில் ஞானம் தன்னின் ஆட்சி தொடங்குமா
எனது ஆசை எழுந்திடாது சென்று அடங்குமா
(MUSIC)
மனத்தைக் கட்ட தினமும் நீ த்யானம் செய்வாயே
சில மணித்துளிகள் ஆன போதும் அமைதி நன்றாமே
(2)
விரைவில்-த்யானம் உயரப்-போகும் வழி-தந்து தானே (2)
உணர்த்தும்-அந்த ஞானம்-என்ற உண்மையைத் தானே
**உன் மெய்யைத் தானே
எனது ஆசை எழுந்திடாது சென்று அடங்குமா
எனது நெஞ்சில் ஞானம் தன்னின் ஆட்சி தொடங்குமா
எனது ஆசை எழுந்திடாது சென்று அடங்குமா
(Short Music)
உனது என்று தனித்தெதுவும் கிடையாது
உனைவிடுத்து உலகிலேதும் கிடையாது
பழுது என்ற அறியாமை விலகும்போது
ஒன்று என்ற உணர்வலையில் நீயும் சேரு
எனது ஆசை எழுந்திடாது சென்று அடங்குமா
 
 
Ø * ஏட்டுச் சுரை மட்டும் / சாத்திரங்களைப் படித்தல் மட்டும் போதாது , சாதனையில் ஈடு பட வேண்டும்

Ø ** உன் உண்மை ரூபம் ஆத்மா என்பது
 

Comments