81.என்னிடத்தில் திரும்பாத மனது(எண்ணிரண்டு பதினாறு வயது)

 
 
 
(#** எண்ணிரண்டு பதினாறு வயது) (* முருகன்)
 
 
என்னிடத்தில் திரும்பாத மனது
(Short Music)
என்னிடத்தில் திரும்பாத மனது
அது உன்னிடத்தில் இருப்பதனால் ஏது சூது வாது
என்னிடத்தில் திரும்பாத மனது
(MUSIC)
ப்ரம்மனுக்கும் பொருளுரைத்தாய் ஓம் ப்ரணவம் என்றாய்
சுப்பனென்று பேரெடுத்தே அப்பனுக்கே உரைத்தாய் (2)
என்னிடத்தில் திரும்பாத மனது
அது உன்னிடத்தில் இருப்பதனால் ஏது சூது வாது
என்னிடத்தில் திரும்பாத மனது
(MUSIC)
ஸ்வாமி அந்தப் பழனியிலே ஆண்டிஎன நின்றாய்
பூமி-வலம் சுற்ற-மயில் மீதமர்ந்தே பறந்தாய்
(2)
பூமி-மலம் சென்றிட-நீ அருள்-புரிந்தே சிறந்தாய்
என்னிடத்தில் திரும்பாத மனது
அது உன்னிடத்தில் இருப்பதனால் ஏது சூது வாது
என்னிடத்தில் திரும்பாத மனது
ஆ.ஆ... (MUSIC)
முக்திக்-கனி அவ்வைக்கு-நீ சுட்டதென்று அளித்தாய் (2)
அருள் முத்தைத்-தரு பத்தித்-திரு புகழ்மாலை அணிந்தாய்
உந்தன் திரு அருளினிலே அருணகிரி உய்ந்தார்
என்னிடத்தில் திரும்பாத மனது
அது உன்னிடத்தில் இருப்பதனால் ஏது சூது வாது
என்னிடத்தில் திரும்பாத மனது

Comments