(#** சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ) (* ஞானம்)
ஞானோதயம் எனக்கென்..றாகுமோ
*என்-தாமரை-மலர் தான்-பூக்குமோ ஞானோதயம் எனக்கென்..றாகுமோ
(2)
நல்யோக..மும்-என்று தான்-கூடுமோ
மெய்-வாசல் வழியாக மெய் தோன்றுமோ
ஞானோதயம் எனக்கென்..றாகுமோ
என்-தாமரை மலர் தான்-பூக்குமோ
(MUSIC)
குளிரான இடை-நாடி இடம் செல்லுமோ
அதன்-ஜோடி எனும்-நாடி வலம் செல்லுமோ
(2)
இவை ஊடி **நடு-நாடி மேல் செல்லுமோ
என் மேனி மறைந்தோட அருள் தோன்றுமோ
என் ஞானம் புலராத குறை போகுமோ
அருள் சூரியன் வந்து ஒளி காட்டுமோ
என்ரூபமே ஒன்று என்றாகுமோ
என்னாளிலே எந்தன் மனம் போகுமோ
***அந்நாட்டில் நான் வாழ இடம் கிட்டுமோ
அருள் சூரியன் வந்து ஒளி காட்டுமோ
என்ரூபமே ஒன்று என்றாகுமோ
ஆஆஆ ..
(MUSIC)
முத்தாக ஒளிவீச சித்தாகுமோ
அது-என்னில் என்-ரூபம் தனைக்-காட்டுமோ(2)
என் சோகம் ஒழிக்கின்ற ஒளி தோன்றுமோ
என் தோஷம் போகின்ற வழி தோன்றுமோ
ஓர் கோயில் என-நெஞ்சு ஆம்-நாள் என்றோ
ஞானோதயம் எனக்கென்..றாகுமோ
என் தாமரை மலர் தான் பூக்குமோ
(MUSIC)
அலை மோதும் இவ்..வாழ்வில் சுகமில்லையே
என்னோடு இருக்கும்-இவ்..வுடல்-தொல்லையே
நடிப்பாக இருக்கும்-இது வாழ்வில்லையே
நிஜமான நான்-என்றும் மனமில்லையே
என்-மேனி விழுமன்று போம்-தொல்லையே
அவனோடு அவனாக நான் வாழுமோர்
நன்னாளும் எனக்கென்று தான்-தோன்றுமோ
அதுகாறும் நான்-வாடி அழுதேங்கவோ
இகத்தோடு ஒரு-மாடு போல் வாழவோ
என் தேடல் சுபமாக என்றாகுமோ
அருள் சூரியன் வந்து ஒளி காட்டுமோ
என்ரூபமே ஒன்று என்றாகுமோ
ஞானோதயம் எனக்கென்..றாகுமோ
என் தாமரை மலர் தான் பூக்குமோ
ஆஹாஹாஹாஹா…
*சஹஸ்ராரத் தாமரை,**சுழுமுனை நாடி
*** அந்நாட்டில்=பரமபதம்
Comments
Post a Comment