(#** எட்டடுக்கு மாளிகையில்) (* அறியாமை)
என் கணக்குச் சரியில்லையே உன் கணக்கும் புரியல்லையே
என்னத்த-நான் செய்வேனய்யா-என்று நான்-விதிர்த்து நின்றேனய்யா
(2)
இன்று நான் விதிர்த்து நின்றேனய்யா
(MUSIC)
ஊரோடு வாழ்வு-என்று கோதோடு சேர்ந்து கொண்டு
வேரோடு சாய்ந்தேன் ஐயா-உன்னை
வேரோடு சாய்ந்தேன் ஐயா-உன்னை
அடியோடு மறந்தேன் ஐயா
(1+Short Music+1)
என்னை யாரென்று மறந்தேன் ஐயா
(MUSIC)
கையளவு கற்றே-எந்தன் மெய்யுணர்வு விட்டே-இந்த (2)
பொய்யுலகில் வாழ்ந்தேன் ஐயா-எந்தன்
மெய் மறந்து போனேன் ஐயா- உலகை
மெய்யென்றி..ருந்தேன் ஐயா
(Short Music)
என் கணக்குச் சரியில்லையே உன் கணக்கும் புரியல்லையே
என்னத்த-நான் செய்வேனய்யா-என்று நான்-விதிர்த்து நின்றேனய்யா
(MUSIC)
ஜாலங்கள் புரியும்-பந்த மாயங்கள் நிறையும்-இந்த (2)
லோகம்-வந்த..தாலே-ஐயா எந்தன் ரூபம்-மறந்..தேனே ஐயா
சொந்த ரூபம் மறந்தேனே ஐயா
(Short Music)
என் கணக்குச் சரியில்லையே உன் கணக்கும் புரியல்லையே
என்னத்த-நான் செய்வேனய்யா-என்று நான் விதிர்த்து நின்றேனய்யா
இன்று நான் விதிர்த்து நின்ற-னய்யா
Comments
Post a Comment