77. என்னுயிர் தானோ என்னுடல் தானோ (என்னுயிர்த் தோழி)



Read along with the Original Track - click here to play

(#** என்னுயிர்த் தோழி) (* அறியாமை)
 
 
என்னுயிர் தானோ என்னுடல் தானோ
எது தானோ-நான் எனும்-என் ஆதி
(1+SM+1)
என்னுயிர் தானோ என்னுடல் தானோ
 
என்னுடல் நானே என்றிடும் நானே
உண்மையில் ஒரு *மானே தோழி
என்னுயிர் தானோ என்னுடல் தானோ
எது தானோ-நான் எனும்-என் ஆதி
(2)
(MUSIC)
அறிவதும் அதுவோ அறிவுதான் அதுவோ .. ஆஆ ..
அறிவதும் அதுவோ அறிவுதான் அதுவோ
எந்தன் திறம்-கொண்டு அறிந்திட அறியேன்
உலகென்னும் புலியின் வாலைப் பிடித்தேன்
மனதினில் இறையை ஒருகணம் நினையேன்
என்னுயிர் தானோ என்னுடல் தானோ
எது தானோ-நான் எனும்-என் ஆதி (2)
(MUSIC)
என்றே..னும்-உனை ஒரு முறையேனும்
நன்றெனும்-சிவசிவ என உரைப்பேனோ
எங்கு தேடி-என் ஆதி காண்பேனோ
எந்தையில் இரண்டற ஜோதியாவேனோ
என்னுயிர் தானோ என்னுடல் தானோ
எது தா..னோ-நான் எனும்-என் ஆதி
(2)
 
 
 
* கஸ்தூரி மான் தன்னிடம் இருந்து தான் மணம் வருகிறது என்று உணராமல் அதனை வெளியில் தேடிக் கொண்டிருக்குமாம்.

 

Comments