76. ஆகாயம் என்றிடவே (ஆகாயப் பந்தலிலே)

(#** ஆகாயப் பந்தலிலே) (* இறைத் தன்மை)
 
ஆகாயம் என்றிடவே பரப்ரம்மம் ஆனதம்மா
(Short Music)
ஆகாயம் என்றிடவே பரப்ரம்மம் ஆனதம்மா
ஒன்றன் பின் ஒன்றாக மற்றவை யெல்லாம் வந்ததம்மா
ஒன்றன் பின் ஒன்றாக மற்றவை யெல்லாம் வந்ததம்மா
ஆகாயம் என்றிடவே பரப்ரம்மம் ஆனதம்மா

(MUSIC)
ஓ..
காற்றாகி அதில் வந்த மூச்சாகி
நெருப்பென்று நீராகிப் பார் என்றே காண்போம் வா
நாம் வாழ நன்னிலத்தை
( SM )
நாம் வாழ நன்னிலத்தை தானாகச் செய்ததம்மா
பாலோடு நீர்போல எங்கும் ப்ரம்மம் கலந்ததம்மா
ஆகாயம் என்றிடவே பரப்ரம்மம் ஆனதம்மா
ஒன்றன் பின் ஒன்றாக மற்றவை யெல்லாம் வந்ததம்மா
(MUSIC)
பாருள்ளும் பரப்ரம்மம் ஊன் உள்ளும்
சுடர்விட்டுத் தானாக நின்றானே காண்போமா
(SM)
சீராகும் நெஞ்சினிலே நன்றாகத் தோன்றுமம்மா
தான் என்றத் திரையின் பின் நின்றே ஒளிரும் ஆத்மாவாம்
(both)
ஆகாயம் என்றிடவே பரப்ரம்மம் ஆனதம்மா
ஒன்றன் பின் ஒன்றாக மற்றவை யெல்லாம் வந்ததம்மா
(MUSIC)
ஆ..ஆ...ஆ..

Comments