75. எனது மனம் ஏனோ (இரண்டு மனம் வேண்டும்)

 
 
 
(#** இரண்டு மனம் வேண்டும்) (* மனம் )
 
எனது மனம் ஏனோ உலவும்-அது வீணோ
மறந்து வாழும் *மானோ மனிதன்-எனக்கு ஏனோ
(2)
எனது மனம் ஏனோ
(MUSIC)
தொடர்ந்து பாயும் எனது மாயம்
ஓய்வு கொண்டே என்று ஓயும்
(2)
உடலும் அந்தோ ஓய்ந்து போகும் (2)
மனது நன்றாய் சென்று மேயும்
எனது மனம் ஏனோ உலவும் அது வீணோ
எனது மனம் ஏனோ
(MUSIC)
இரவும் பகலும் பாராமல் எந்தன் பேச்சைக் கேளாமல் (2)
சிறிதும் வெட்கம் கொள்ளாமல்
அய்யய்யய்யய்யோ
சிறிதும் வெட்கம் கொள்ளாமல் உள்ளம் என்றொரு பேராலே
எனது மனம் ஏனோ
(MUSIC)
தினம்-எனைப் படுத்திடும் ஆசை வழி
அதில்-விழ என்னிடம் பேசும்-மொழி
(2)
அதனிடம் பிதுங்குது எனது விழி
அய்யய்யய்யய்யோ
அதனிடம் பிதுங்குது எனது விழி
அதை விட எனக்கில்லை நல்லவழி
எனது மனம் ஏனோ உலவும் அது வீணோ
மறந்து வாழும் மானோ மனிதன் எனக்கு ஏனோ
எனது மனம் ஏனோ
 
 
* கஸ்தூரி மான் தன்னிடம் இருந்து தான் மணம் வருகிறது என்று உணராமல் அதனை வெளியில் தேடிக் கொண்டிருக்குமாம்.
 

Comments