74. வாழ்வில் அன்பே ஒரு பூஜை (தேவன் கோவில் மணியோசை)

 
 
 
 
(#** தேவன் கோவில் மணியோசை ) (* அன்பு)
 
வாழ்வில் அன்பே உயர்-பூஜை
அது-வாழ்ந்திடும் நெஞ்சே உயர்-கோவில்
(2)
ஏழை என்றாலும் அவனிடம் இருக்கும்
வேண்டுவதில்லை அது காசை
வாழ்வில் அன்பே உயர்-பூஜை
அது வாழ்ந்திடும் நெஞ்சே உயர்-கோவில்
(MUSIC)
துயரால் துடிப்பார் அவர்-பால் அன்பால்
உதவும்-நெஞ்சே ஒரு-கோவில்
காசா பணமா அன்புச் சிரிப்பே கடவுள்-ஏற்கும் ஒரு பூஜை
இந்த உண்மையின் கூற்றொரு குரு போலே
நல்ல வழியினைக் காட்டிடும் சிறப்பாலே
வாழ்வில் அன்பே உயர்-பூஜை
அது வாழ்ந்திடும் நெஞ்சே உயர்-கோவில்
(MUSIC)
*அருமை மனைவி அன்புமம்..பிகையே -
என்பது-குருவின் திருவார்த்தை
அந்நாள்-அன்பால் பூஜை-செய்தே
காட்டிய அன்பெனும் ஒரு பாதை
இது ராமக்கி..ருட்டி..னரின் திரு-வாழ்வில்
சிவம் அன்பெனக் காட்டிய திருக்காதை
வாழ்வில் அன்பே ஒரு பூஜை
அது வாழ்ந்திடும் நெஞ்சே ஒரு கோவில்
 
 
* ராமகிருஷ்ணர் தன் மனைவி சாரதா தேவியின் அன்பையே தெய்வமாகப் பாவித்து அவருக்கு பூஜை செய்தார். இதன் மூலம் தெய்வம் உறைவது எங்கு, உண்மையான பூஜை என்பது என்ன என்பதை நமக்கு அழகுறக் காட்டுகிறார். அவதார புருஷர்களின் வாழ்க்கையே சாதகர்களுக்கு வழங்கிய செய்தியாகும்.
 

Comments