71. எத்தனைக் கூற்றிலும் (சித்திரப் பூவிழி வாசலிலே)

Read along with Original Track

(#** சித்திரப் பூவிழி வாசலிலே) (* மனம்)
 
எத்தனைக் கூற்றிலும் நீயுமுன் கூத்தினை..யே என்-மனமே
நீ கொஞ்சம்-நிறுத்தலை வெட்கம் உனக்கிலை ஏன் என்மனமே
ஏன் என்மனமே ஏய்..என்மனமே

(1+Short Music+1+Short Music)
எந்தன் துணை எனவே சாமி உன்னையும் தந்தாரே (2)
என்-துணை என்றுனை நம்பி-நான் கண்டது
 மாபெரும் தொல்லைகளே நீ தந்தது தொந்தரவே
எத்தனைக் கூற்றிலும் நீயுமுன் கூத்தினை..யே என்-மனமே
நீ கொஞ்சம்-நிறுத்தலை வெட்கம் உனக்கிலை ஏன் என்மனமே
ஏன் என்மனமே ஏய்..ஏய்..என்மனமே
(Music)

நித்தமலைந்திடும் நெஞ்சமே நான்-உனை மேய்ப்பது எப்படியோ
உன்னைக் கட்டிப் புவி-தனில் நீ-தினம் மேய்-தல்-த..டுப்பதும் எப்படியோ
(2)
உன்னை மட்டும் கண்-காணித்துன் பின்னே-க..ணம்-வந்து சுற்றுவ..தென்-வேலையோ
நீ பற்றி-அலைந்திடும் ஆசைத் தளை-விட்டு என்று-நான் மீளுவதோ
நெஞ்சே என்று-நான் மீளுவதோ ஐயோ என்றும்-உன் ஆளுகையோ
எத்தனைக் கூற்றிலும் நீயுமுன் கூத்தினை..யே என்-மனமே
நீ கொஞ்சம்-நிறுத்தலை வெட்கம் உனக்கிலை ஏன் என்மனமே
(MUSIC)
எந்தன் மனம்-உந்தன் சொந்தம் எனச்-சொல்ல -
உன்-மனம் ஒன்றில்லையோ
மனம் என்னும்-கொடியதோர் தண்ட..னையை-உனக்..கென்றேன் அளிக்கலையோ
(2)
பெரும்-தண்..டனையை-வெறும் மானிடர்க்கே-எனத்
தந்தது..வும்-முறையோ
இல்லை உன்னைப்-படைத்ததில் தன்னைமறந்தது ஆண்டவனின் குறையோ
அட ஒன்றும் விளங்கலையே உன்னைக் கேட்க-ஓர் ஆளில்லையே .. ஓ .. ஓஓஓ
எத்தனைக் கூற்றிலும் நீயுமுன் கூத்தினை..யே என்-மனமே
நீ கொஞ்சம்-நிறுத்தலை வெட்கம் உனக்கிலை ஏன் என்மனமே
ஏன் என்மனமே ஏய்..ஏய்..என்மனமே

Comments