(#** பசுமை நிறைந்த நினைவுகளே ) (* நன்றி)
அவனை-நினைத்துப் பாடல்களைப் பாடிக் களித்து என்னுடனே
உருகித் துதித்த தோழர்களே நன்றி சொல்கின்றேன்
(2)
(MUSIC)
குறைமதியாலே அறிந்தவன்-போலே பாடித் திரிந்தேனே (2)
குழந்தையைப்போலே எனையும்-நினைத்து ரசித்துமகிழ்ந்தீரே(2)
அளவில்லாமல் பொறுமையைக் காட்டி ஊக்குவித்தீரே (2)
பாவம் நண்பன் என்பதாலே பொறுத்துக் கொண்டீரே
உண்மை நட்பு கொண்டீரே
அவனை-நினைத்துப் பாடல்களைப் பாடிக் களித்து என்னுடனே
உருகித் துதித்த தோழர்களே நன்றி சொல்கின்றேன்
(MUSIC)
எந்தன்-பாட்டில் குற்றம்-காணில் பொறுத்துக் கொண்டீரே (2)
எந்தன்-அறிவில் உள்ள-குறையை மறந்து சிறந்தீரே (2)
எந்த நாளும் நண்பர்-உம்மை பணிந்துப் பண்ணாலே (2)
உள்ளம்-கனிந்த நன்றி-சொல்லி வணங்கி நிற்பேனே
நெஞ்சில் வணங்கி நிற்பேனே
அவனை-நினைத்துப் பாடல்களைப் பாடிக் களித்து என்னுடனே
அவனை-நினைத்துப் பாடல்களைப் பாடிக் களித்து என்னுடனே
உருகித் துதித்த தோழர்களே நன்றி சொல்கின்றேன்
(2)
நான்.. நன்றி சொல்கின்றேன்
நான்.. நன்றி சொல்கின்றேன்
Comments
Post a Comment