105. சத்யம் தர்மம் சாந்தி-நிலைத்திட(புத்தன் ஏசு காந்தி பிறந்தது)

Click here for the Original Track

(#**புத்தன் ஏசு காந்தி பிறந்தது) (* கீதை)

சத்யம் தர்மம் சாந்தி-நிலைத்திட பூமியில் வருவேனே
என்றே கண்ணன் உரைத்தானே
அன்பை பண்பை அருளை வழங்கிட வருவேன் என்றானே
ஞானம் வழங்க கீதையைச் சொன்ன கண்ணபிரான் தானே
கேள்விகள்-எதற்கும் பதிலுமிருக்கு கீதையில் அழகாக
காண்பாய் என்றே காந்தி-உரைத்தது இருக்குது-வாக்காக
சத்யம் தர்மம் சாந்தி-நிலைத்திட பூமியில் வருவேனே
என்றே கண்ணன் உரைத்தானே
(MUSIC)
பலன் விட்டு அன்பு செயல்-தன்னைக் கொண்டு
குறை-தள்ளி அங்கு நிறை-தன்னைக் கண்டு
இருள்-என்ற கோது களைகின்ற பேர்க்கு
அறியாமை சென்று விளங்காதோ **ஒன்று
உண்மையாய்-இதை கீதை-சொல்லுது மோட்சத்தின் வழியாகும்
நம்மை-எண்ணியே அன்றே-சொன்னது கண்ணனின் மொழியாகும்
சத்யம் தர்மம் சாந்தி-நிலைத்திட பூமியில் வருவேனே
என்றே கண்ணன் உரைத்தானே
(MUSIC)
இருள் சென்ற நெஞ்சே சிவன் ஆடும் தில்லை
பொருள் என்னும் நஞ்சை அவன் ஏற்பதில்லை
***மனம் கொண்ட அன்பில் இலை தந்த போதும்
மறுக்காமல் ஏற்பான் என்று கீதை கூறும்
பொன்னையும் பொருளையும் செலவிடும் பூஜையை இறைவன் கேட்பதில்லை
உன்பொருள் வாங்கிப் பிழைத்திடும்-வறுமை 
இறைவனுக் கென்றுமில்லை
சத்யம் தர்மம் சாந்தி-நிலைத்திட பூமியில் வருவேனே
என்றே கண்ணன் உரைத்தானே
அன்பை பண்பை அருளை வழங்கிட வருவேன் என்றானே
ஞானம் வழங்க கீதையைச் சொன்ன கண்ணபிரான் தானே
கேள்விகள்-எதற்கும் பதிலுமிருக்கு கீதையில் அழகாக
காண்பாய் என்றே காந்தி-உரைத்தது இருக்குது-வாக்காக
சத்யம் தர்மம் சாந்தி-நிலைத்திட பூமியில் வருவேனே
என்றே கண்ணன் உரைத்தானே

*விரை= உயர்ந்த **ஒன்று=இறைவன் *** கீதை 9-26

Comments