(#** நான் பாடும் பாடல் ) (* இறை தேடல்)
நான் பாடும் பாடல் புதிராகத் தோன்றும் புதிராகத் தோன்றும்
(MUSIC)
நான் பாடும் பாடல் புதிராகத் தோன்றும்
அதில்-உண்மை இழையாக ஓடும்
அதில் பல-ஐயம் தெளிவாகக் கூடும்
(1+Short Music+1) + (MUSIC)
வாழ-வாழ வாழவே தோன்றும்
வாழ்வில் ஏது இன்பம் எது-வொன்றும்
(2)
எங்கே “நான்” என்று தேடிடுவாய் நெஞ்சே
அன்றோடு உன் வாழ்வும் ஓங்கும்
(2)
உலகம் ஓர் அலைபோலே அதில் போகும் நீ பேதை (2)
என்றே இராதே உய்வாய் நெஞ்சே
உணர்வாய் உன்னை
நான் பாடும் பாடல் புதிராகத் தோன்றும்
அதில்-உண்மை இழையாக ஓடும்
அதில் பல-ஐயம் தெளிவாகக் கூடும்
(MUSIC)
த்யானத்தோடு யோகம் கொள்வாயே
தானத்தோடு சேவை செய்வாயே
(1+Short Music+1)
அன்பே சிவமென்பார் தனைக்-கண்ட பெரியோர்
தேனாய் இருப்பாய்-என் மனமே
(2)
இது-வேதம் தரும்-போதம் எனவே-நீ அதைப்-பேண (2)
நெஞ்சே-உன் பின்னால் உலகம்-வரும் தெய்வம் வரும்
நான் பாடும் பாடல் புதிராகத் தோன்றும்
அதில்-உண்மை இழையாக ஓடும்
அதில் பல-ஐயம் தெளிவாகக் கூடும்
Comments
Post a Comment