102. அடாடா-இனிது (ஒருநாள் இரவு பகல் போல் நிலவு)



 

(#** ஒருநாள் இரவு பகல் போல் நிலவு ) (* இறை தேடல்)

அடாடா-இனிது சுடர்போல் வடிவு என்பதுவே-என் மெய்-எனும்-“நான்
(2)
சொல்லால் வருமா எழுத்தா..கிடுமா
கண்களில் படுமா சொல்-என் “நான்” (2)
அடாடா-இனிது சுடர்போல் வடிவு என்பதுவே-என் மெய்-எனும்-“நான்”
(MUSIC)
சித்தமும் மறைத்தது முதன்-முதலே-ஒரு மனமும்-அடுத்ததன் மீதினிலே
(1+Short Music+1)
தங்கம்-போன்ற ஒளி-கொடுத்தேஅது தானாய் இருக்குது உள்ளுக்குள்ளே
தானாய்-இருக்குது உள்ளுக்குள்ளே
(Short Music)
என்னுயிர் "நானே" என்றே அழைப்பாய் (2)
இருப்பது எங்கே சொல் என்றே
இன்றே புரிவாய் த்யானமும் ஜபமும்
புரிவாய் உடனே நீ இன்றே (2)
(Pause)
கண்ணே தெரிவேன் நன்கே தெரிவேன்-உன்
*கண்பட ஒளிர்வேன் நான் என்றே
(Music)
கண்ணே தெரிவேன் நன்கே தெரிவேன்
*கண்பட ஒளிர்வேன் "நான்" என்றே
வந்திடும் நிஜம் பார் உன் முன்னே
(MUSIC)
வானத்தின் எல்லை கண்படுமா
அந்த மோனத்தின் எல்லை ஒலி தருமா
(1+Short Music+1)
அதுவே நான் எனக் காட்டிடுமே-நீ அதுவரை பொறுப்பாய் என் மனமே
அதுவரை பொறுப்பாய் என் மனமே (3)
 

*ஞானக்கண்

Comments