(#** பிள்ளைக்குத் தந்தை ஒருவன் ) (* இறை தேடல்)
உண்மைக்கு என்றும் அருவம் நம்-எல்லோருக்கும் அன்றோ உருவம் (2)
நீ உருவினை உண்மை என்றாயே அந்தோ *உன்மெய்யை உண்மை என்றாயே (2)
உண்மைக்கு என்றும் அருவம் நம்-எல்லோருக்கும் அன்றோ உருவம்
(MUSIC)
நோயாக வந்த-பிறப்பாலும் உண்மை உணர்த்தாத மாயப் பிடிப்பாலும்
(2)
உணர்த்தாத மாயப் பிடிப்பாலும் (2)
யாரந்த நான் என்று புரியா நம் எல்லோருக்கும் இந்தக் குறையே குறையே
உண்மைக்கு என்றும் அருவம் நம்-எல்லோருக்கும் அன்றோ உருவம்
(MUSIC)
உள்நோக்கு கொள் நெஞ்சே போதும் அது இல்லாமல் செல்வாக்கைத் தேடும்
(2)
நில்லாமல் செல்வாக்கைத் தேடும்
பொல்லாத போக்கை-நீ-கொண்டாய் நம் எல்லோருக்கும் இந்தக் குறையே குறையே
உண்மைக்கு என்றும் அருவம் நம்-எல்லோருக்கும் அன்றோ உருவம்
நீ உருவினை உண்மை என்றாயே அந்தோ *உன்மெய்யை உண்மை என்றாயே
உண்மைக்கு என்றும் அருவம் நம்-எல்லோருக்கும் அன்றோ உருவம்
*உன் உடலை
Comments
Post a Comment