70. தாய் போலப் பாலூட்டி(மான்குட்டி இப்போது)

(#** மான்குட்டி இப்போது) (* இறை நாம மகிமை)
 
பாலூட்டித் தாய் போலக் காப்பாற்றுமே ராம்-என்ற பேர் என்றுமே
மாண்பூட்டிச் சீரூட்டி நான் காட்டுமே ராம் என்றே பேர் ஒன்றுமே
பாலூட்டித் தாய் போலக் காப்பாற்றுமே ராம்-என்ற பேர் என்றுமே
நல்ல மாண்பூட்டிச் சீரூட்டி நான் காட்டுமே ராம் என்றே பேர் ஒன்றுமே
நா-கூறத் தேனூறுமே கூறும் நெஞ்சங்க..ளும்-தேறுமே (2)
(MUSIC)
வேடிக்கை என்றே-போல் நீசொல்ல..வே-நெஞ்சில்
மெய்-காட்டும் ராம் நாமமே
(2)
காணிக்கை அன்பென்ற உன்-நெஞ்சமே மற்ற தெல்லாமதன் பின்னரே
(2)
நாளைக்குக் கூறட்டுமா என்றே தள்ளாமல் நீ கூறடா
நா-கூறத் தேனூறுமே கூறும் நெஞ்சங்க..ளும்-தேறுமே
பாலூட்டித் தாய் போலக் காப்பாற்றுமே ராம்-என்ற பேர் என்றுமே
(MUSIC)
பேரொன்றே நீ சூட்டும் பூமாலை தான்
நீ கூறாயோ ராமன் பேரை
பூவென்ற நெஞ்சத்தில் நீ கூறவே
நீ யாரென்று காட்டும் உன்னை
யோகிக்குத் திரு மந்திரம் என் போல் பாவிக்கு ராம் மந்திரம்
நா-கூறத் தேனூறுமே கூறும் நெஞ்சங்க..ளும்-தேறுமே
பாலூட்டித் தாய் போலக் காப்பாற்றுமே ராம்-என்ற பேர் என்றுமே
(MUSIC)
நான்-என்ற நோய்-போகும் பார்-நெஞ்சிலே நீ
ராம் ராம என்றே சொன்னால்
(2)
நீயே-ராம் என்றாக்கும் பார்-உண்மையாய்
அதை நெஞ்சத்தி..லே-கொள்ளய்யா
(2)
இன்றே சொல் ராம் நாமமே வேறே ஓர் நாமம் ஏன் பாரிலே
நா-கூறத் தேனூறுமே கூறும் நெஞ்சங்க..ளும்-தேறுமே

பாலூட்டித் தாய் போலக் காப்பாற்றுமே ராம்-என்ற பேர் என்றுமே
நல்ல மாண்பூட்டிச் சீரூட்டி நான் காட்டுமே ராம் என்றே பேர் ஒன்றுமே

முதல் பக்கம்
 
Comments